:
Breaking News

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம்:

top-news

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் விருப்ப பாடத்திற்கான மதிப்பெண்கள் இனி தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

விருப்ப பாடங்களை எழுதக்கூடிய மாணவர்களுக்கு இனி 6 பாடத் தேர்வுகள் 600 மதிப்பெண் என்ற நடைமுறை அமல்படெத்த உள்ளது. வழக்கம்போல் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என 5 பாடங்களை மட்டும் எழுதக்கூடிய மாணவர்களும் எழுதலாம் என்றும் தெரிகிறது. 

நடப்பு ஆண்டு வரை 4ஆவதாக இடம் பெறக்கூடிய விருப்ப பாடத்திற்கு எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் அதை கணக்கில் கொள்வது இல்லை எனவும் ஒரிரு மாதங்களில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து தேர்வு முறையில் மாற்றம் செய்தது பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *