:
Breaking News

மும்பை அணியை மிரள வைத்த குட்டி யுவராஜ்

top-news

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் வீரர் அபிஷேக் ஷர்மா 16 பந்துகளில் அரை சதம் கடந்துள்ளார்.


இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 16 பந்துகளை எதிர்கொண்ட இவர் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். .


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்று மாபெரும் சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக இந்தியாவைச் சேர்ந்த 23 வயதான அபிஷேக் ஷர்மா விளங்கினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களுடைய முதல் ஓவரில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.


அபிஷேக் ஷர்மா என்ற இடதுகை பேட்ஸ்மேன் இன்று மும்பை இந்தியன்ஸ் அணி பவுலர்களுக்கு சாவு பயத்தை காட்டி இருப்பார். சிக்ஸர் பவுண்டரி என்று பறக்கவிட்ட அபிஷேக் ஷர்மா 16 பந்துகளில் அரை சதம் கடந்த மொத்தமாக 23 பந்துகளை மட்டுமே எதிர்கொண் அவர் 63 ரன்கள் விளாசினார்.


இதில் ஏழு சிக்ஸர்களும், மூன்று பவுண்டரிகளும் அடங்கும். ஸ்ட்ரைக் ரேட் 273 என்ற அபாயகரமான அளவில் இருந்தது. இந்த இன்னிங்ஸை பார்த்தவுடன் பல ரசிகர்களும் யார் இந்த அபிஷேக் ஷர்மா என்று தேடி வருகிறார்கள். அபிஷேக் ஷர்மா ஐபிஎல் தொடரில் விளையாடுவது புதிதல்ல. அவர் 2018 ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *