:
Breaking News

பாஜகவில் இணைகிறார் தமிழ் நடிகை சுமலதா

top-news

பிரபல நடிகையும், மாண்டியா மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான சுமலதா, பாஜகவில் இணைவதாக அறிவித்துள்ளார்.

தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசிய அவர், சுயேச்சையாக போட்டியிட்டு தன்னை வெற்றி பெறச் செய்த மாண்டியா மக்களை எப்போதும் மறக்கமாட்டேன். விரைவில் பாஜகவில் இணைகிறேன்; எப்போதும் போல உங்களின் ஆதரவு வேண்டும் எனத் தெரிவித்தார். இவர் தமிழில் முரட்டுக்காளை, கழுகு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

யார் இந்த சுமலதா?

நடிகை சுமலதா 1963இல் சென்னையில் பிறந்தவர். அவர் தனது பள்ளிப் படிப்பை குண்டூரில் உள்ள செயின்ட் ஜோசப் கான்வென்ட் பள்ளியில் பயின்றார். 1979இல் ஆந்திரப் பிரதேச அழகிப் போட்டியில் வென்ற அவர், 15 வயதில் நடிக்கத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்த அவர், நடிகர் அம்பரீஷை திருமணம் செய்தார். காங்கிரஸில் சீட் கிடைக்காததால் பாஜக ஆதரவு உடன் 2019இல் சுயேச்சையாக வெற்றி பெற்று எம்பி ஆனார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *