:
Breaking News

TNPL கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியீடு

top-news

2024 தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் தொடர் அட்டவணை இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை இத்தொடர் நடைபெற உள்ளது.

சேலத்தில் நடைபெறும் முதல் போட்டியில், லைகா கோவை கிங்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம், சென்னை ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.

சர்வதேச இந்திய கிரிக்கெட் வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், வருண் சக்கரவர்த்தி நட்ராஜன் உள்ளிட்ட முன்னணி கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரில் விளையாட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *