:
Breaking News

லட்சக்கணக்கில் விலை போன பருத்தி மூட்டைகள்

top-news

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது.


அதன்படி நேற்று பருத்தி ஏலம் நடந்தது. விவசாயிகள் 1, 300 பருத்தி மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். இவைகள் 260 லாட்டுகளாக பிரித்து பொது ஏலம் விடப்பட்டது. இதில் பி. டி. ரக பருத்தி குவிண்டால் ஒன்று ரூ. 7, 900 முதல் ரூ. 8, 569 வரை விற்பனையானது. டி. சி. எச் ரக பருத்தி, குவிண்டால் ஒன்று ரூ. 8, 600 முதல் ரூ. 11, 779 வரை விற்பனையானது. இதேபோல் கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்று ரூ. 4, 950 முதல் ரூ. 6, 790 வரை விலை போனது.


நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரூ. 35 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *