:
Breaking News

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

top-news

மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க 16-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேசிய தேர்வு முகமையானது 2024-ம் ஆண்டு மருத்துவ படிப்பிற்கான ஆன்லைன் மூலம்நீட்தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று முன்தினம் (9-ஆம் தேதி) கடைசி நாள் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இணையதளத்தில் ஆதார் சர்வர் பிரச்சினை மற்றும் ஒ.டி.பி. வருவதில் சிக்கல் ஏற்பட்ட காரணத்தினால் மாணவ, மாணவிகள் பெரும் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில் 2024-ஆம் ஆண்டிற்கான மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு விண்ணப்பம் பதிவு செய்ய வருகிற 16-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு செய்து தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் மருத்துவ படிப்பிற்காக விண்ணப்பிக்க முடியாமல் தவித்த மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *