:
Breaking News

இந்தியா மீது குற்றம் சுமத்தும் கனடா அரசு

top-news

கனடாவின் பொதுத் தேர்தல்களில் இந்தியா தலையிட முயன்றதாக கனடா அரசு குற்றச்சாட்டியுள்ளது.

கனடாவில் 2019 மற்றும் 2021-ல் நடந்த  தேர்தல்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் தலையிட முயன்றதாக குற்றம்சாட்டி கனடா உளவுத்துறை ஆவணங்களை வெளியிட்டுள்ளது.

அதில், 2021-ம் ஆண்டுத் தேர்தலில் இந்திய அரசு ப்ராக்ஸிகளை பயன்படுத்தி இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் எண்ணம் கொண்டிருந்ததாக கனடா அரசு பரபரப்பு குற்றச்சாட்டியுள்ளது.

2019 தேர்தலில் கனடாவில் உள்ள பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் பாகிஸ்தான் அரசின் நலன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் இரகசியமாக செல்வாக்கு செலுத்த முயன்றதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

2019 மற்றும் 2021 கனடா தேர்தல்களில் சீனா, இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் தலையிட்டனவா? என்பது குறித்து கனடா அரசு தொடர்ந்து விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *