:
Breaking News

தூர்தர்ஷனில் 'The Kerala Story' திரைப்படம் - சங்பரிவாரின் விஷமத்திட்டத்தின் ஒரு பகுதி!

top-news

இன்று தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மலையாள மொழியில் "தி கேரளா ஸ்டோரி" படத்தை ஒளிபரப்பு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், தேர்தலுக்கு முன் இந்தப் படத்தை ஒளிபரப்ப முயற்சிப்பது ஆளும் பாஜகவின் தேர்தல் வாய்ப்புகளை அதிகரிக்க, சமூகத்தை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் முயற்சியாகும். தூர்தர்ஷனின் இந்த முடிவு கேரள மக்களை நேரடியாக அவமதிக்கும் செயல்.

இது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல் என்பதால், படத்தை ஒளிபரப்பும் முடிவுக்குக் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *