:
Breaking News

திமுகவுக்கு ஆதரவு நடிகர் கருணாஸ் உறுதி

top-news

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார். 


அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அவர் ஆதரவு வழங்க உள்ளார். துரோக அதிமுகவை வீழ்த்த 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்த அவர், பாஜக எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த அனைவரும் ஒரே குடையின் கீழ் அணியாக திரள வேண்டியுள்ளதாக கூறினார். 


நடிகர் கருணாஸ் அவர்கள் 2016ஆம் சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். அம்மாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவிலிருந்து விலக்கி திமுகவுக்கு ஆதரவளித்து வந்தார்

2021 ஆம் சட்டமன்ற தேர்தலின் போது கூட, நடிகர் கருணாஸ் தேர்தலில் போட்டியிடாமல் திமுக கட்சிக்கு ஆதரவு அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *