:
Breaking News

சமக-வை பாஜக உடன் இணைத்தார் சரத்குமார்

top-news

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு, பாஜகவுடன் இணைப்பதாக சரத்குமார் அறிவித்துள்ளார்.

நடிகர் சரத்குமார் அவர்கள், இரண்டு நாட்களுக்கு முன்பு பாஜகவுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் இன்று சென்னையில், தமிழக பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் எல். முருகன் முன்னிலையில் தனது அகில இந்திய சமத்துவ கட்சியை பாரதி ஜனதா கட்சியுடன் இணைத்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து பேசிய நடிகர் சரத்குமார், பாஜகவுடன் இணைந்தது சமகவின் முடிவல்ல என்றும், இது மக்கள் பணிக்கான தொடக்கம் எனவும் தெரிவித்தார். 2007ஆம் ஆண்டு சமக-வை சரத்குமார் தொடங்கினார்.

பல்வேறு நாடார் சங்கங்கள் நடிகர் சரத்குமார் அவர்களுக்கு ஆதரவு அளித்து வந்துள்ளன. அதிமுகவுடன் கூட்டணி வைத்து நடிகர் சரத்குமார் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *