மூன்றாம் தர பெண் என்று ஆபாசமாக ஜோதிமணி எம்.பி யை விமர்ச்சித்த பாஜக கரு. நாகராஜன்..! தொடர்ந்து பேச அனுமதித்த நியூஸ் 7 தொலைக்காட்சி ?

0
554

நியூஸ் 7 தொலைகாட்சி விவாத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, புலம் பெயர்ந்தோரின் பிரச்னைகள் குறித்து பேசினார். அப்போது, “பிரதமரை கல்லால் அடிப்பார்கள்” என்று அவர் பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு பதில் அளித்த பாஜகவைச் சேர்ந்த கரு. நாகராஜன், “நீ நாடாளுமன்ற உறுப்பினரா, இல்ல கேவலமான பெண்ணா” என்று கடுமையான வார்த்தைகளில் விமர்ச்சித்தர்.

டிவி விவாதம் என்பதை மறந்து, சர்வ சாதாரணமாக ஒரு பெண்ணை பொதுவெளியில் இழிவாக அழைத்தார். நாகராஜனை கண்டித்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் ஜோதிமணி. பின்னர் பாஜக உறுப்பினரின் இந்த இழிவான செயலை கண்டித்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதியும் வெளியேறினார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் ஜோதிமணி, ”ஊடக விவாதங்களில் பாஜகவினர் தொடர்ந்து, அநாகரிகமாக நடந்து கொள்ளும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊடகங்களையும், நெறியாளர்களையும், எதிர்க்கட்சிகளையும் மிரட்டியே பணிய வைக்கலாம் என்று எண்ணுகின்றனர். பெண் என்றால் கூடுதலாக, ஒரு ஆபாச அணுகுமுறை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இன்று நியூஸ் 7 விவாதத்தில் இருந்து, பாஜகவின் கரு நாகராஜன் என்கிற மூன்றாம் தரமான மனிதரின், தரம்கெட்ட பேச்சால் வெளியேறினேன். பிஜேபியின் ஆபாச அரசியலை உங்கள் துணையோடு, களத்தில் நேர்நின்று எதிர்கொள்வேன். உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here