வரும் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசுப் பணிகள், நுழைவுத் தேர்வுகள் : விவரங்கள்

0
88

வரும் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசுப் பணிகள், தேர்வுகள் குறித்த விவரங்கள்:

1. பஞ்சாபி தேசிய வங்கி: 

மத்திய ஆயுதப்படை உதவி கமாண்டன்ட் பதவி: உடனே விண்ணப்பியுங்கள்

பஞ்சாப் தேசிய வங்கியில் Specialist Officers (SO) 145 காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ள ஆர்வலர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.pnbindia.in/ வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் தற்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி 2022 மே 7 ஆகும்.

2. டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள்: 

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய 626 பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.05.2022

TNPSC: 626 காலி பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்- https://tnpsc.gov.in/Document/tamil/2022_10_CESE_tam.pdf

3. ரகசிய அதிகாரி:

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இரகசியப் பிரிவில் உதவி ரகசிய அதிகாரிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ACIO/II Tech Examination: உதவி ரகசிய அதிகாரிப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்- 150 பணியிடங்கள்

பதவியின் பெயர்: உதவி ரகசிய அதிகாரி கிரேடு II – தொழிநுட்பம் சார்ந்த பணி (Assistant Central Inteligent officer- Grade II/Technical)

காலிப்பணியிடங்கள்: 150

இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07-05-2022

4. பரோடா வங்கியில் : வேளாண் விற்பனை அதிகாரி பதவி 

வேளாண் விற்பனை அதிகாரி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை பரோடா வங்கி (Bank Of Baroda) வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பரோடா வங்கியில் வேலை: வேளாண் விற்பனை அதிகாரிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன.நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி:  26.04.2022 இரவு 11:59 மணி வரை.

5. உதவி கமாண்டன்ட் பதவி:  மத்திய ஆயுதப்படை உதவி கமாண்டன்ட் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை மத்திய அரசு தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF), எல்லை பாதுகாப்புப் படை (BSF), இந்தோ – திபெத்திய எல்லைக் காவல்படை, மத்திய தொழிலக காவல் படை (CISF), சிறப்பு சேவை பணியகம் (SSB ) ஆகிய ஆயுத காவல்படைகளில் உள்ள 253 உதவி கமாண்டன்ட் பதவிகள் நிரப்பப்பட இருக்கின்றன .

மத்திய ஆயுதப்படை உதவி கமாண்டன்ட் பதவி: உடனே விண்ணப்பியுங்கள்

இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய கடைசி நாள் : 10/05/2022, மாலை 6 மணி