ஒரே நாளில் பிறந்த இந்திய சினிமாவின் ஜாமவான்கள்:

0
78

இந்திய திரை உலக வரலாற்றில் கொடிக் கட்டி பறந்து கொண்டிருக்கும் நபர்கள் மத்தியில், 80களில் தொடங்கி இன்றளவும் தரமும், மதிப்பும் குறையாது இருவர்.

ஒன்று இசைஞானி இளையராஜா ; இன்னொன்று இயக்குனர் மணிரத்னம் .

இந்த இரண்டு ஜாம்பவான்களின் சினிமா கூட்டணி 1983 இல் ஆரம்பித்தது .இருவரும் தமிழர்கள் என்றாலும் இவர்களை இணைத்தது ஒரு கன்னட படம்.

1983இல் மணிரத்னம் முதல் முதலாக இயக்கிய “பல்லவி அணுபல்லவி” என்ற கன்னடப் படத்திற்கு இளையராஜா தான் இசை. படமும், இசையும் மாபெரும் வெற்றி , அடுத்த ஆண்டே இவர்கள் இணைந்து கோலோச்சியது , அரபிக்கடல் முட்டி மோதி தழுவி கிடக்கும் மலையாள திரை உலகில் “உணரு” படம் மூலம் . தொழிற்சங்கத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் மணிரத்தினம் கம்யூனிஸம் பேசியிருப்பார்.

இப்படி இரண்டு படங்களிலும் அடுத்த இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியதில் இருவருக்கும் இடையே ஒரு புரிதலும் இணக்கமும் இயல்பாக வந்தது. அந்த நட்புக்கு அடையாளமாக வெளிவந்தது தான் 1986இல் வந்த “மௌனராகம்” படம்,சூப்பர் டூப்பர் ஹிட் . சிறந்த மாநில மொழி திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. 35 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் நம் மனதை விட்டு அகலாமல் இருக்கிறது “மௌனராகம்” படமும் இசைஞானியின் பாடல்களும்.

மீண்டும் 87இல் இளையராஜாவும் மணிரத்தினமும் இனைந்து மிரட்டிய படம் “நாயகன்” .

இயக்கமும் இசையும் ஒரு புதிய சரித்திரத்தை ஏற்படுத்தியது . 60வது ஆஸ்கார் விருதுக்கு இந்திய அரசால் பரிந்துரைக்கபட்டது . படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் நாயகனுக்கு மேலும் மகுடம் சூட்டின.

வருடத்திற்கு ஒரு படம் வீதம் மணிரத்தினமும்,இளையராஜாவும் இணைந்த பட வரிசையில் 1988இல் வந்த படம் “அக்னி நட்சத்திரம்”. இந்த படத்தில் இளையராஜாவின் பாடல்கள் அமோகமாக வந்ததால் அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் கேமரா frame இல் புதிய தொழில் நுட்பத்தில் பாடல்களை படம் பிடித்தார். அந்த அளவுக்கு இயக்கமும் இசையும் மிக நேர்த்தியாக அமைந்திருந்தது.

இந்த நேரத்தில் இளையராஜாவும் மணிரத்னமும் இணைந்தது தெலுங்கில் “கீதாஞ்சலி” என்ற படத்திற்காக. அது தமிழிலில் “இதயத்தை திருடாதே” என்று மொழி மாற்றம் செய்யப்பட்டது. காலம் கடந்தும் அந்த படத்தின் பாடல்கள் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

அடுத்து 1990இல் இவர்கள் கூட்டணியில் உருவான திரை படம் “அஞ்சலி” . இந்த படமும் 63வது ஆஸ்கார் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டது

1991இல் ரஜினி, மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த “தளபதி” படம் மாபெரும் வெற்றி பெற்றது .

தளபதி படத்தின் இயக்குனர் மணிரத்தினத்திற்கும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் தேசிய அளவில் சிறந்த விருதுகள் வழங்கப்பட்டது .

நட்பை அடிப்படையாக வைத்து எடுத்த தளபதி படத்தோடு இளையராஜா, மணிரத்னம் திரை கூட்டணி முடிவுக்கு வந்தது. வரலாற்றின் முரண்பாடு என்றே சொல்லலாம்.

இருவரும் தனிதனியாக இந்திய திரையுலகில் பயணித்தாலும், இருவரும் எப்போதுமே தவிர்க்க முடியாது ஜமவான்கள் தான்.

அவர்கள் இருவருக்குமே ஒரேநாளான ஜூன் 2ம் தேதியான அன்று தான் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.