டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்-குரூப் 1/2/2A/4 – தேர்வில் கேட்கப்படும் வினாக்கள்

0
84

தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி – டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப்2/2A- குரூப் 4

மொத்தம் முக்கிய வினாக்கள்-60

யூனிட்-8/ யூனிட்-9

1.     சென்னை மாகாணம் பொ.ஆ 1801 இல் உருவாக்கப்பட்டது.

2.     சென்னை மாகாணம் உள்ளடக்கிய பகுதிகள் –

           1.     ஆந்திரா 

           2.     கேரளாவின் மலபார் பகுதி

           3.     தெற்கு கர்நாடகா.

           4.     ஓடிசாவின் வடபகுதி முழுவதும்

           5.     லட்சத்தீவு

3.     திராவிடன் – என்ற வார்த்தை அறிஞர்கள் , தமிழர் அல்லாதோர்/ ஆரியரல்லாத தமிழ் பேசுபவர்களை அடையாளம் கண்டுகொள்ள பயன்படுத்தப்பட்டது.

4.     1801  – ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் இருந்த மொழிகள் –

தமிழ் ,தெலுங்கு , மலையாளம் ,கன்னடம் , துலு.

5.     இந்திய கலாச்சாரம் என்பது ஒரே மாதிரியான தன்மை கொண்டது அல்ல என்றும், புத்த , திராவிட மரபுகள் கூட இருந்தன என்றும் நிரூபித்த ஆய்வாளர்கள்-

           1.   பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் -1816.

           2.     ஜேம்ஸ் பிரின்சிபே – 1837.

           3.     கால்டுவெல் -1856.

6.     மகாராஷ்டிராவில் பிராமணரல்லாதோர் இயக்கத்தை தொடங்கியவர்-ஜோதிபா பூலே.

7.     சென்னைவாழ் மக்கள் சங்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்ட ஆண்டு-1852 (கங்காலு லட்சுமி நராஷ்)

8.     1909 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட – மின்டோ மார்லி சீர்திருத்தம்  சீர்திருத்த சட்டத்திற்குபிறகு சென்னை மாகாணத்தை சேர்ந்த பிராமணர் அல்லாதோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று எதிர்ப்பு காட்ட துவங்கினர்.

9.     சர் அலெக்சாண்டர் ஜோர்டன் கார்டிவ்  1913 ஆம் ஆண்டு அளித்த புள்ளி விவரப்படி மக்கள் தொகையில் 3 சதவீதம் மட்டுமே வசிக்கும் பிராமணர்கள் வாய்ப்புகளையும் எடுத்துக் கொண்டார்கள் என நிரூபித்தது .

10.   1916 ஆம் ஆண்டு தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பை நிறுவியவர்கள் –

டாக்டர் டி.எம். நாயர் , சர் பிட்டி தியாகராயர் , டாக்டர் சி. நடேசனார்.

11.   நீதிக்கட்சி :

           1.     ஆங்கில இதழான நீதி என்ற பெயரின் அடிப்படையிலேயே நீதிக்கட்சி  என பெயரிடப்பட்டது.

           2.     இவர்களின் ஓயாத முயற்சியினால் பிராமணர் அல்லாதோருக்கு சட்டமன்றத்தில் இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது.

           3.     பிராமணர் அல்லாதோரின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக பொதுக்கருத்தை உருவாக்குதல்.

12.   1919 ஆம் ஆண்டு மாகாணங்களில் இரட்டை ஆட்சி முறை கொண்டு வந்ததன் மூலம் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு – 1920.

13.   1920 ஆம் ஆண்டு தேர்தலில் நீதி கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று சென்னை மாகாணத்திற்கு – எ. சுப்பராயலு – முதலமைச்சரானார் —

14.   1920 ஆம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில்- காங்கிரஸ் கட்சி  ஒத்துழையாமையின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்தது .

15.   நீதி கட்சி :

           1.     பல்வேறு ஏற்ற இறக்கம் இருந்தபோதிலும் நீதிக்கட்சி 1921 முதல் 1937 வரை தொடர்ச்சியாக அதிகாரத்தில் இருந்தது.

           2.     வகுப்புவாரி அரசாணை மூலம் ஒவ்வொரு பிராமணரல்லாத பிரிவினருக்கும் அனைத்து துறைகளிலும் போதுமான வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்பட்டது.

           3.     பஞ்ச மக்களுக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்து கொடுத்தனர்

16.   சென்னை மாகாணத்தில் இந்து சமய அறநிலைய வாரியத்தை அமைத்த கட்சி –நீதிக்கட்சி.

17.   மதிய உணவு திட்டத்தை” பரிசோதனை முறையில் கொண்டு வந்த கட்சி- நீதிக்கட்சி.

18.   யாருடைய முயற்சியால் இந்தியாவில் முதல் முறையாக தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது – டாக்டர் முத்துலட்சுமி.

19.   பெண்களுக்கு வாக்குரிமை “எந்த கட்சி ஆட்சியின் போது கொண்டுவரப்பட்டது –நீதிக்கட்சி.

20.   நீதிக்கட்சி ஆட்சியின் கீழ் முக்கிய சீர்திருத்தங்கள் –

           1.     கூட்டுறவு சங்கங்கள் மேம்படுத்தப்பட்டன.

           2.     மிராசுதாரர்கள் முறை ஒழிக்கப்பட்டது.

           3.     1929 அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும்1925  ஆந்திரா பல்கலைக்கழகம் ஆகியவை உருவாக்கப்பட்டன.

21.   நீதிக்கட்சி ஆட்சியின் கீழ் நீர்பாசன திட்டங்கள் உருவாக்கப்பட்ட ஆண்டு- 1923.

22.   இந்தியைக் கட்டாய பாடமாக்குவதை எதிர்த்து “தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை அழித்து வட இந்திய ஏகாதிபத்தியத்தை” நிறுவும் முயற்சி என கூறியவர் – பெரியார்.

23.   இந்தித் திணிப்பு என்பது திராவிடர்களை அடிமைப்படுத்தி ஆரியர்களின் மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான முயற்சி என்று கூறியவர் – பெரியார்.

24.   15 ஆண்டுகளில் 23 முறை சிறை சென்றார் என்பதால் சிறைப்பறவை என்று அடைமொழியிட்டு அழைக்கப்பட்டவர் – பெரியார்.

25.   பெரியார் எந்த ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது நீதி கட்சியில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் -1938.

26.   நீதிக்கட்சி எந்த ஆண்டு தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என்ற தீர்மானத்தை இயற்றியது – 1938.

27.   சேரன்மாதேவி குருகுலத்தில் நடந்த சாதி பாகுபாட்டிற்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்- பெரியார்.

28.   சுயமரியாதை இயக்கம் 1925 ஆம் ஆண்டு பெரியாரால் தொடங்கப்பட்டது. இவ்வியக்கத்தின் நோக்கம்.

           1.     தேர்தல் அரசியலை தவிர்த்தது.

           2.     சமூக சீர்திருத்தம் , ஜாதி முறையை ஒழிப்பது.

           3.     பெண்கள் மீதான பாலின அடிப்படையிலான தடை நீக்கம்.

           4.     பரம்பரை அர்ச்சகர் உரிமையை எதிர்த்து பிரச்சாரம்.

29.   பெண்கள் மாநாட்டில் ஈ.வெ. ராமசாமிக்கு பெரியார் என்ற பட்டம் எந்த ஆண்டு வழங்கப்பட்டது – 1938 நவம்பர்.

30.   சுயமரியாதை கருத்துக்களை சிறப்பான முறையில் பிரச்சாரம் செய்த பெரியாரின் நாளேடுகள் – குடியரசு , புரட்சி , விடுதலை .

31.   செங்கல்பட்டில் முதலாவது சுயமரியாதை மாநாடு நடந்த ஆண்டு -1929.

32.   1937 ஆம் ஆண்டு முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் – இராஜாஜி.

33.   பள்ளிகளில் இந்தியை கட்டாய பாடமாக அறிமுகப்படுத்தியவர் -இராஜாஜி.

34.   பொதுவுடமைக் கட்சி உருவாக்கப்பட்ட ஆண்டு – 1925.

35.   சுயமரியாதை இயக்கத்தின் சமூக சீர்திருத்த திட்டங்களால் கவரப்பட்டவர்- M. சிங்காரவேலர்.

36.   எந்த ஆண்டு வரை சுயமரியாதை இயக்கம் சென்னை மாகாணத்தில் ஒரு முன்னோடி இயக்கமாக இருந்தது-1929 (1930 இல் புகழ் மங்கத்தொடங்கியது)

37.   சுயமரியாதை இயக்கம் வீழ்ச்சிக்கு மூன்று முக்கிய காரணங்கள் .

           1.     ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை பிரிவு மக்களிடையே ஆதரவை இழந்தது.

           2.     பெரியார் தலைமையில் இருந்த சுயமரியாதை இயக்கம் மிகவும் புரட்சிகரமான சீர்திருத்த இயக்கமானது.

           3.     உயர்குடியின மற்றும் ஆங்கில ஆதரவு கண்ணோட்டம் ஆகியவை பெருமளவில் அதன் வீழ்ச்சிக்கு குறிப்பிடத்தகன.

38.   ராஜாஜியின் முக்கிய சீர்திருத்தங்கள்-

           1.     முழுமையான மதுவிலக்கு.

           2.     ஜமீன்தாரி முறை ஒழிப்பு.

           3.     ஒடுக்கப்பட்டோர் ஆலய நுழைவு தடை நீக்கம்.

           4.     இந்தி மொழியை கட்டாயமாக பள்ளியில் அறிமுகப்படுத்தினார்.

39.   இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற ஆண்டு -1937.

40.   முதலமைச்சர்:

           1.     சுப்பராயலு -1920 – 1921.

           2.     பனகல் ராஜா- 1921 – 1926.

           3.     பி . சுப்புராயன் – 1926 -1930.

           4.     பி. முனுசாமி – 1930 – 1932.

           5.     பொப்பிலி ராஜா – 1932 -1937.

           6.     பி.டி. இராசன் – 1936.

           7.     கே.வி. ரெட்டி -1937.

           8.     சி. இராஜாஜி – 1937 – 1939.

41.   1944 ஆம் ஆண்டு சேலம் மாநாட்டில் நீதிக்கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என்று சிறப்புமிக்க தீர்மானத்தை கொண்டு வந்தவர்- சி. என். அண்ணாதுரை.

42.   திராவிட நாடு திராவிடர்களுக்கே  என முழக்கமிட்டவர் – பெரியார்.

43.   1965 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் நாள் இந்திய அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 313 ன் படி இந்தி மொழி இந்திய நாட்டின் அலுவலக மொழியாக ஆக்கப்பட்டது. (திமுக துக்க தினமாக அனுசரிக்க தீர்மானித்தது).

44.   அறிஞர் அண்ணா திராவிடர் கழகத்தை விட்டு பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு- 1949 செப்டம்பர் 17.

45.   சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்பட்டவை சட்டத்துக்காகவும் விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை- காமராசர்.

46.   சமூக மற்றும் கல்வி அடிப்படையில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சாதகமாக இட ஒதுக்கீடு அளிக்கும் முதலாவது நாடாளுமன்ற சட்டதிருத்தம் இயற்றப்பட்ட ஆண்டு – 1951.

47.   பரம்பரைத் தொழில் எனப்படும் குலக்கல்வி என்ற புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்தியவர் – இராஜாஜி.

48.   தண்டியாத்திரை பற்றி கருத்து தெரிவித்தவர் -அருந்ததி ராய்.

49.   காமராசர் ஆட்சியில் முக்கிய சிறப்பம்சங்கள்.

           1.     ஆட்சிக்காலம் 1954 – 1963.

           2.     தொடக்கக் கல்வி திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்தார்.

           3.     குலக்கல்வி திட்டத்தை ஒழித்தார்.

           4.     பள்ளிகளின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்த்தினார்.

           5.     பல அணைகளைக் கட்டி நீர்ப்பாசன வசதியை உயர்த்தினார்.

           6.     நிறைய தொழில்பேட்டைகளை அமைத்தார்

           7.     மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

50.   காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டு திமுக வெற்றி பெற்ற ஆண்டு-1967.

51.   மாநில மறுசீரமைப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு -1956.

52.   சி. என். அண்ணாதுரை ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட முக்கிய திட்டங்கள்-

           1.     அனைத்து ஏழைகளுக்கும் வீட்டுவசதி.

           2.     படியரிசி திட்டத்தின் மூலம் உணவு பாதுகாப்பிற்கு முன்னோடியாக இருந்தது.

           3.     குடிசை மாற்று வாரியம் அமைத்தது.

53.   சி. என். அண்ணாதுரையின் தலைமையிலான அரசாங்கம் மெட்ராஸ் மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்த ஆண்டு – 1969.

54.   அண்ணா ஆட்சி காலத்தில் முக்கிய சாதனைகள்-

           1.     75 மைல் தொலைவிற்கு மேல் உள்ள பேருந்து தடங்களை தேசிய மயக்கியது.

           2.     பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வி மற்றும் தொழில் கல்விக்கு முந்தைய படிப்புகளுக்கு கல்வி கட்டண விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

           3.     இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது.

           4.     திருமண சட்டம் இயற்றப்பட்டது.

           5.     தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது.

55.   படி அரிசி , ஒரு ரூபாய் என்ற விலையில் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்- சி.என். அண்ணாதுரை.

56.   எம்.ஜி. ராமச்சந்திரன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு -1972.

57.   சென்னை பல்கலைக் கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது – 1857.

58.   மக்கள் தொகை அடிப்படையில் தமிழகம் இந்தியாவின் எத்தனையாவது பெரிய மாநிலமாக உள்ளது -7.

59.   தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பு” பிற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது –நீதிக்கட்சி.

60.   பிராமணரல்லாதோர் கூட்டறிக்கையினை வெளியிட்டவர் –