கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி நாடு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை இழந்துள்ளது..
சீனாவின் உகாண் நகரில் அமைந்துள்ள கடல் உணவு சந்தையில் உருவானதாக சந்தேகிக்கப்படும் கொரோனா வைரஸ் , சீன நாட்டினுள் பரவுவதற்கு முன் கண்டம் விட்டு கண்டம் தாவி அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கண்டங்களில் தன் கோர முகத்தை பதிவு செய்துவருகிறது.
ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த இத்தாலியே இதுவரை கொரோனா உயிரிழப்புகளை அதிகம் சந்தித்த நாடாகும். 92,472 பேர் பாதிக்கப்பட்டுள்ள அந்த நாட்டில் 10,023 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரே மாதத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை இத்தாலி இழந்துள்ளதால் அங்குள்ள கல்லறைகளிலும், சர்ச் களிலும் இறுதி சடங்கிற்காக உடல்கள் நீண்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள காட்சி காண்போரை கண்கலங்க செய்கின்றன…