தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டது.
இதில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கூறப்பட்டது.
இந்த உத்தரவை மீறி தகுதி இல்லாதவர்களை நியமிப்பதாகப் புகார் எழுந்ததால் தற்காலிக ஆசிரியர் நியமனத்தை நிறுத்த தமிழக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.