சீரியல் நடிகையின் மார்பிக் படம்: கண்ணீர் மல்க எச்சரிக்கை வீடியோ

0
439

சின்னத்திரை சீரியல் நடிகை லட்சுமி வாசுதேவன் அழுகையுடன் எச்சரிக்கை வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

தனக்கு ₹ 5 லட்சம் பரிசு விழுந்திருப்பதாக ஒரு மெசேஜ் லிங்க்குடன் வந்ததாகவும், தானும் அதை யதார்த்தமாக க்ளிக் செய்தவுடன், தன்னுடைய ஃபோன் பதார்த்தமாக ஹேக் செய்யப்பட்டு, அனைத்து தகவல்கள், பர்சனல் ஃபோட்டோஸ், கான்டாக்ட் எண்கள் உள்ளிட்ட அனைத்தையும் எவனோ எடுத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டி மெசேஜ் செய்ததாகவும்,

மேலும் தன் படத்தை பலான பலானபடி எல்லாம் மாற்றி தன் வாட்ஸ்அப் லிஸ்டில் உள்ள தன் அம்மா, அம்மம்மா, அப்பப்பா மற்றும் அவர் உறவினர்களுக்கெல்லாம் மின்னல் வேகத்தில் அனுப்பி தனக்கு கொடுமை செய்து விட்டதாகவும் வேதனையுடன் கூறியுள்ளார். ஆகவே, லிங்க்குகளை க்ளிக்க வேண்டாமென இதைப் பார்ப்பவர்களை எச்சரித்துள்ளார். காவல்துறையிடம், இதுகுறித்து சொல்லியாச்சு சொல்லியாச்சு என்கிறார், அவர் வீடியோவில்.

ஆன்லைன் மோசடியில் பிரபலங்கள் கூட சிக்கி பாதிக்கப்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://www.instagram.com/reel/Ci2gwbGD637