தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவர் சேடப்பட்டி முத்தையா காலமானார்: யார் இவர்? திமுக வா?அதிமுக வா?

0
164

சேடப்பட்டி முத்தையா உடல்நலக் குறைவால் காலமானார்.

தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவரும், திமுக தேர்தல் பணிக்குழு தலைவருமான சேடப்பட்டி முத்தையா (வயது 77) மதுரையில் உடல்நலக் குறைவால் காலமானார்.

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 3 மாதங்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முன்னாள் அவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா(77) சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலமானார்.

1977, 1980, 1984, 1991 ஆகிய 4 முறை சேடப்பட்டி சட்டமன்ற தொகுதியிலிருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால் சேடப்பட்டியார் என அழைக்கப்பட்டார்.

சேடப்பட்டி முத்தையாவுக்கு சகுந்தலா என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவருடைய இளைய மகன் மு.மணிமாறன் திமுகவின் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

இவரது இறுதிச் சடங்கு திருமங்கலத்தை அடுத்த குன்னத்தூர் பகுதியை அடுத்த முத்தப்பன்பட்டியில் அவரது தோட்டத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.