சௌமா இலக்கிய விருதுகள் -2022
சௌமா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பாக கீழ்க்காணும் பிரிவுகளில் இலக்கிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
- சிறந்த நவீன கவிதை நூல்– பரிசுத் தொகை +கேடயம்
2) சிறந்த நாவல் – பரிசுத் தொகை +கேடயம்
3) சிறந்த சிறுகதை நூல் – பரிசுத் தொகை +கேடயம்
பரிசுத் தொகை:
நவீன கவிதை சிறுகதை நாவல் ஆகிய மூன்று பிரிவுகளில் தனித்தனியே ரூ.10,000/- பரிசுடன் சௌமா இலக்கிய விருது வழங்கப்படும்.
விதிமுறைகள்:
2021ஆம் ஆண்டு வெளியான நவீன கவிதை, நாவல் மற்றும் சிறுகதை நூல்களின் இரண்டு பிரதிகள் 30.06.2022 தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன.
அனுப்ப வேண்டிய முகவரி :
முனைவர் தமிழ்மணவாளன் எண்.18,பத்மாவதி நகர், மாதவரம் பால்பண்ணை, சென்னை-600 051. தொடர்புக்கு :9444796336.
கடந்த ஆண்டுகள் போலவே மணப்பாறையில் நிகழவிருக்கும் இலக்கிய விழாவில் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் படைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.