எஸ்எஸ்சி: 2022ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வுகள் அறிவிப்பு; முழு விவரங்கள் மற்றும் விண்ணப்ப உதவிக்கு! SSC CGL

0
1424

STAFF SELECTION COMMISSION பணியாளர் தேர்வு ஆணையம்

Combined Graduate Level Examination, 2022 ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு, 2022

இந்திய அரசாங்கத்தின் அமைச்சகங்கள்/ துறைகள்/ அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு அமைப்புகள்/ சட்டப்பூர்வ அமைப்புகள்/ தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள பல்வேறு குரூப் ‘பி’ மற்றும் குரூப் ‘சி’ பதவிகளை நிரப்பிட ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுகளை பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.

அதன்படி 2022-23 ஆண்டிற்கான எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்;

குரூப் பி: உதவி தணிக்கை அதிகாரி, உதவி பிரிவு அலுவலர், ஆய்வாளர் (வருமான வரி, மத்திய கலால் வரி, தடுப்பு அதிகாரி), உதவி அமலாக்கம் அதிகாரி மற்றும் பல்வேறு பிரிவுகளில் உள்ள ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் பதவிகள்.  

படிக்க: TNPSC – Combined Statistical Subordinate Services Examination – Assistant Statistical Investigator, Computor & Statistical Compiler – BA / B.Sc / BCA / MA / M.Sc – Last Date 14/10/2022

குரூப் சி: ஆடிட்டர், கணக்காளர், வரி உதவியாளர், மூத்த நிர்வாக அதிகாரி உதவியாளர், மூத்த செயலக உதவியாளர்/ மேல் பிரிவு எழுத்தர்கள், அஞ்சல் உதவியாளர்/ வரிசைப்படுத்துதல் உதவியாளர் மற்றும் பலவேறு பிரிவுகளில் உள்ள மேல் பிரிவு எழுத்தர்கள் பதவிகள்

படிக்க: TNPSC – Combined Civil Services Examination-III (Group-III.A Services) – Junior Inspector of Co-operative Societies in Co-operative Department & Store-Keeper, Grade-II in Industries and Commerce Department – 12th – Last Date: 14/10/2022

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பு அ ல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

உதவி தணிக்கை அதிகாரி/உதவி கணக்கு அதிகாரி பணிகளுக்கு விரும்பத்தக்க தகுதிகள்: பட்டய கணக்காளர் அல்லது செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் அல்லது நிறுவன செயலாளர் அல்லது வணிகத்தில் முதுநிலை அல்லது முதுநிலை வணிக ஆய்வுகள் அல்லது வணிக நிர்வாகத்தில் முதுநிலை (நிதி) அல்லது வணிக பொருளாதாரத்தில் முதுகலை.

இளநிலை புள்ளியியல் அதிகாரி: பட்டபடிப்புடன் பன்னிரெண்டாம் வகுப்பில் கணிதத்தில் 60சதவிகிதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். புள்ளியியல் பாடம் உள்ள ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்

படிக்க: TNPSC – Tamil Nadu Jail Service – Tamil Reporter & English Reporter – Any Degree + Shorthand – Last Date: 13/10/2022

படிக்க: TNPSC – Tamil Nadu Legislative Assembly Secretariat Service – Jailor (Men) & Jailor (Special Prison for Women) – Any Degree – Last Date: 12/10/2022

மேலும் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள் இன்று முதல் அடுத்த மாதம் 13 ஆம் தேதி இரவு 11 மணி வரை விண்ணப்பிக்கலாம். 

SSC SI 2022: எஸ்எஸ்சி நடத்தும் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வுகளுக்கு எப்படி தயார் ஆவது? பாடத்திட்டங்கள் மற்றும்…

இதற்கு விண்ணப்பம் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி,எஸ்.டி பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பிக்க கட்டணமம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

SSC Steno 2022: எஸ்எஸ்சி நடத்தும் ஸ்டெனோகிராபர் பணிக்கான தேர்வுகளுக்கு எப்படி தயார் ஆவது? பாடத்திட்டங்கள் மற்றும் பயிற்சிக்கான விவரங்கள்

SSC JE 2022: எஸ்எஸ்சி நடத்தும் ஜூனியர் என்ஜினீயர் பணிகளுக்கு எப்படி தயார் ஆவது? பாடத்திட்டங்கள் மற்றும் இலவச பயிற்சிக்கான விவரங்கள்!

எஸ்எஸ்சி பிராந்தியம் மற்றும் பிராந்தியத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள்: தெற்கு மண்டலம் (SR)/ ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா.

பிராந்திய இயக்குனர் (SR), பணியாளர் தேர்வு ஆணையம், 2வது தளம், ஈவிகே சம்பத் கட்டிடம், டிபிஐ வளாகம், கல்லூரி சாலை, சென்னை – 600006, தமிழ்நாடு (www.sscsr.gov.in)

தேர்வு நடைபெறும் இடங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.

Important Links:

விளம்பர அறிக்கைக்கு / Advertisement Links: Click Here
Staff Selection Commission: Click Here
Apply Now: Click Here

டி.என்.பி.எஸ்.சியில் எத்தனை குரூப் தேர்வுகள் உள்ளது? எந்தெந்த குரூப் தேர்வுகளுக்கு என்னென்ன வேலை கிடைக்கும் உங்களுக்கு தெரியுமா? #TNPSC

FREE CIVIL SERVICE EXAM & ENTRANCE EXAM COACHING: CLICK HERE UPSC | TNPSC | SSC JE | TNUSRB | NEET | JEE |  NDA