சினிமா பணிகளுக்கும் வாய்ப்பு தேடுபவர்களுக்கும் தனது அலுவலகத்தை இலவசமாக பயன்படுத்த சொன்ன சோழநாட்டான் பட இயக்குநர் ரஞ்சித் கண்ணா ..!

0
830

கொரோனா பாதிப்பால் நாம் பலவற்றை இழந்து வருகிறோம். பல நல்ல உள்ளங்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் திரைத்துறையை சேர்ந்த ஒருவர் தன்னுடைய அலுவலகத்தை சினிமா பணிகளுக்கு இலவசமாக பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த சினிமா இயக்குனர் ரஞ்சித் கண்ணா என்பவர், நடிகர் விமலை வைத்து சோழநாட்டான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

நமக்கு அவர் அளித்த செய்தியில் கொரோனா நோய் மற்ற தொழிலை போலவே சினிமா துறையையும் முடக்கியுள்ளது. வரும் நாட்கள் இன்னும் பெரும் போராட்டம் கொண்டதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை, ஆனால் எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை விடாமல் தொடர்ந்து போராடி வெற்றி பெறுவோம்.

புதிய தயாரிப்பாளர்கள் தேடும் இணை, துணை, உதவி இயக்குனர்கள், வேலை தேடுவோர், ஸ்கிரிப்ட் தயார் செய்பவர்கள், டீம் டிஸ்கஸ் செய்பவர்கள், வெளியூரிலிருந்து வந்து ஒரு நாள் தங்கி வாய்ப்பு தேடுபவர்கள் வளசரவாக்கம் ஸ்ரீதேவி நகர் 3வது தெருவில் இருக்கும் எனது அலுவலகத்தை தங்கள் அத்தியாவசியத்திற்கும், அவசரத்திற்கும் பயன்படுத்தி கொள்ளலாம்.
ஏசி அறை, கணினி, அச்சுப்பொறி, ஜெராக்ஸ், பேப்பர், பேனா போன்ற முக்கிய தேவையான பொருட்களை இலவசமாக பயன்படுத்தலாம். என்னால் முடிந்த சிறு உதவி இது, நம் சினிமா சொந்தங்கள் பயன்படுத்தி உங்கள் வெற்றி இலக்கை அடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

சோழநாட்டான் திரைப்படம் வெற்றி அடைய எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here