சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு- சிக்கும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ….

0
209

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்த வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரை, போலீசார் விசாரிக்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்தவர் சித்ரா, 29. சன் டிவி,விஜய் டிவி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பரபலமானவர். விஜய் டிவி. யில் ஒளிப்பரப்பான பாண்டியன் ஸ்டோர் தொடரில் இவரது ஏற்று நடித்த “முல்லை” என்னும் கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில், நடிகை சித்ரா, இவர், 2020 டிசம்பர், 9ல் செம்பரம்பாக்கத்தில் நட்சத்திர ஓட்டலில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவை, அவரது கணவர் ஹேம்நாத் தற்கொலைக்கு தூண்டியதாக, அவரது தந்தை காமராஜ் கொடுத்த புகார்படி, நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, சித்ராவின் கணவரை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை ஓராண்டுக்கு மேலாக சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது பல்வேறு முக்கிய புள்ளிகள் வழக்கில் சிக்கியுள்ளனர்.

சித்ரா மரணத்துக்கு ஒரு முக்கிய அரசியல்வாதி, போதை கும்பல், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் தான் காரணம். அவர்கள் மிகுந்த பணபலம் மிக்கவர்கள். அவர்களை நான் ஒன்றும் செய்ய முடியாது. எனது மனைவியின் தற்கொலைக்கு பின்னால் பணபலமிக்க மாஃபியா கும்பல் இருப்பது பலருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் வெளியே சொன்னால் இறந்து விடுவோம் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தில் அரசியல் பின்னணி கொண்ட கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இந்த வழக்கை போலீசார் மீண்டும் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

சென்னையைச் சேர்ந்த சிலர், அரசியல் பலம் படைத்த நபர்களிடம், பெரிய அளவில் பணம் வாங்க முயற்சி செய்கின்றனர். அதற்கு, என்னையும் உடந்தையாக்க பார்க்கின்றனர். ‘ஒத்துழைக்கவில்லை என்றால், உன்னையும் கொன்று விடுவோம்’ என, மிரட்டுகின்றனர்’ என, தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கு யார் காரணம் என்பதை கண்டறிய, மீண்டும் அந்த வழக்கை விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், அவருடன் தொடர்பில் இருந்த அரசியல், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் யார் என்பதை பட்டியலிட்டுள்ளனர்.நடிகை சித்ராவின் தற்கொலைக்கு முன், பெரம்பலுாரில், ‘கிப்ட் ஷாப்’ திறப்பு விழாவில் பங்கேற்றார். அதன் பின், அப்போதைய அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., ஒருவரின், தொடர் தொந்தரவே காரணம் என, முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

அதனால், அவரை போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வந்து, தீவிரமாக விசாரிக்க உள்ளதாகவும், அரசின், ‘கிரின் சிக்னல்’ கிடைத்ததும், இந்த வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது