வரலாற்றில் இன்று சத்ய சாயி பாபா பற்றி…

0
710

சத்ய சாயி பாபா (Sathya Sai Baba, நவம்பர் 23, 1926- ஏப்ரல் 24, 2011) தென்னிந்திய ஆன்மிக குரு. இயற்பெயர் சத்தியநாராயண ராயூ.
சத்ய சாயிபாபா தனது 14வது அகவையில் சீரடி சாயி பாபாவின் மறு அவதாரம் எனத் தன்னை அறிவித்துக் கொண்டார்.

சத்ய சாயிபாபா நிறுவனம் தனது சாயி அமைப்புகள் மூலம் இலவச மருத்துவ நிலையங்கள், பாடசாலைகள், உயர்கல்வி நிலையங்கள், கிராமங்களுக்கு குடிநீர்த் திட்டம் போன்ற பல சமூகநலத் திட்டங்களை இந்தியாவிலும் வேறு பல நாடுகளிலும் அறிமுகப்படுத்தி நடத்தி வருகிறது. இவரது ஏறத்தாழ 1350 சத்ய சாய் அமைப்புகள் 155 மையங்களில் உலகெங்கிலும் செயல்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தி எனும் கிராமத்தில் பிறந்தார். அவர் தாயாரின் பெயர் ஈசுவரம்மா, தந்தை பெத்தவெங்கம ராயூ ரட்னாகரம். சத்திய சாயி இவர்களுக்கு 8-ஆவது குழந்தையாகப் பிறந்தார். ”சத்ய நாராயண விரதம்” இருந்து பிறந்ததால், இவருக்குச் சத்திய நாராயணன் எனப் பெயர் சூட்டினர்.

அருள்மிகு சத்திய சாயிபாபா மற்றும் அவரது பக்தர்கள் நூற்றுக்கணக்கான சமூகச்சேவை நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சமூகச் சேவை நிறுவனங்கள் எனப் பல வழிகளில் இச்சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல பாகங்களிலும் இவை இயங்குகின்றன. விழுமிய சமூகம் (Sociocare), விழுமியக் கல்வி (விழுக்கல்வி, Educare), விழுமிய மருத்துவம் (Medicare), விழுமியக் குடிநீர் (aquacare) எனப் பல துறைகளில் அவரின் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அவரது நிறுவனம், உலகம் முழுவதும் 136 நாடுகளில் மக்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டுள்ளது.

விழுமியச் சமூக (Sociocare) நிறுவனம் உலகின் பல இடங்களில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றது. சமீபத்தில் ஒரிசாவில் நடந்த வெள்ளத்தில் வீடுகள் இழந்தவர்களுக்குப் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

கல்விப் பாடத்திட்டத்தின் மூலம், சாயி நிறுவனம் உலகின் பல நாடுகளில் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் பயன்பெறும் வகையில் பல கல்வி அமைப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இவை அனைத்தும் மாணவர்களிடம் இருந்து எந்த விதமான கட்டணங்களும் பெறுவதில்லை.

விழுமிய மருத்துவத்தினைத் தொண்டுப்பணியாக அருள்மிகு சத்தியசாயி நிறுவனம் உலகின் பல நாடுகளில், சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் பயன் பெறும் வகையில் பல இலவச மருத்துவ முகாம்களையும், பல இலவச மருத்துவமனைகளையும் நடத்திவருகின்றது..புட்டபர்த்தியிலும் பெங்களூருவிலும் அருள்மிகு சத்தியசாயி உயர்சிறப்பு மருத்துவமனைகள் நிறுவப்பட்டுள்ளன.

தூய குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆந்திரவில் உள்ள அனந்தபூர் மற்றும் வடக்கு,கிழக்கு கோதாவரி மாவட்டங்களுக்கு சுத்தீகரிக்கப்பட்ட குடிநீரைச் ”அருள்மிகு சத்திய சாயி மைய அறக்கட்டளை” வழங்கி உள்ளது. அனந்தபூர் மாவட்ட குடிநீர்ப் பிரச்னை சுதந்திர காலத்திற்கு முற்பட்டது, எந்த அரசாலும் தீர்த்துவைக்க முடியாமல் இருந்தது. இதனை சத்திய சாயிபாபா ஒரே வருடத்தில் எழுநூறு கிராமத்திற்கு நல்ல குடிநீர் கிடைக்கும்படியாக செய்து முடித்தார்.
சென்னை மக்களின் தாகத்தைத் தீர்க்கத் தமிழகம் மற்றும் ஆந்திர அரசுகளால் முயற்சி செய்யப்பட்ட, தோல்வியடைந்த தெலுங்கு கங்கைத் திட்டத்தினைச் சீர்செய்து சென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கியது சத்திய சாயி மைய அறக்கட்டளை.

அனைத்து மதக் கொண்டாட்டங்களையும் அதன் உட்கருத்தை உணர்ந்து கொண்டாடுவது, பஜனை எனப்படும் போற்றிசை, நகர சங்கீர்த்தனம்,மதங்களின் உண்மைத் தத்துவத்தைப் புரிந்து கொள்ள ஆன்மீக வாசகர் வட்டம் என்கின்ற ஆய்வுவட்டம் போன்ற பல செயல்கள் உலகெங்கும் நடைபெறுகின்றன.

84 வயதான சாயி பாபா உடல் நலக்குறைவு, மூச்சுத் திணறல் காரணமாக சத்தியசாயி மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் 2011 மார்ச் 28ம் திகதி சேர்க்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்
2011 ஏப்ரல் 24 ஞாயிற்றுக்கிழமை காலை இந்திய நேரம் 07:40 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.சத்ய சாய் பாபா விற்கு இந்திய அஞ்சல் துறையினர் இறைவார்த்தை அஞ்சல் தலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றில் நவம்பர் 23 சத்ய சாய்பாபா பிறந்த தினம் குறித்து திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துரைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here