சரவணபவன் நிறுவனர் ராஜகோபால் வழக்கு குறித்து உருவாக உள்ள திரைப்படம்: எச்சரிக்கை விடுக்கும் உணவக உரிமையாளரின் வழக்கறிஞர்

0
227

தமிழ் உட்பட பிற மொழிகளிலும் சரவணபவன் நிறுவனர் ராஜகோபால் வழக்கு குறித்து திரைப்படம் எடுக்க உள்ளதாக ஜெய்பீம் திரைப்பட இயக்குநர் அறிவித்துள்ள நிலையில், ராஜகோபால் குறித்து அவதூறு பரப்பும் வகையில் படம் எடுத்தால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வழக்கறிஞர் கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சரவணபவன் ராஜகோபால் – ஜீவஜோதி வழக்கை அடிப்படையாக வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் வெளியான படம் ஜெய்பீம். இருளர் இன மக்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் பாராட்டை பெற்றது.

டி.ஜே.ஞானவேல் இயக்கிய இந்த படத்தில் சூர்யா வக்கீலாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்து இயக்குநர் ஞானவேல் இயக்கும் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சரவணபவன் ராஜகோபால் – ஜீவஜோதி வழக்கை அடிப்படையாக வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.


தமிழகத்தை சேர்ந்த ஹோட்டல் அதிபர் சரவணபவன் ராஜகோபால் – ஜீவஜோதி வழக்கு அனைவரும் அறிந்த ஒன்று. இந்த வழக்கில் ஜீவஜோதியின் கணவன் சாந்தகுமாரை கொலை செய்துவிட்டதாக சரவணபவன் ராஜகோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது.

18 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஜீவஜோதிக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை தொடர்ந்து சரவணபவன் ராஜகோபால் சிறை தண்டனை பெற்றார். தற்போது இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து தனது அடுத்த படத்தை இயக்க ஞானவேல் தயாராகி வருகிறார். ஆனால் இந்த படத்தை அவர் இந்தியின் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜங்கிள் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு ‘தோசா கிங்’ என்று பெரிடப்பட்டுள்ள நிலையில், ஜீவஜோதி கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் ஞானவேல் இந்தியில் இயக்குநராக அறிமுகமாக உள்ள நிலையில், தமிழகத்தில் பிரபலமான சரவணபவன் ராஜகோபால் ஜீவஜோதி வழக்கு தற்போது இந்திய அளவில் பிரபலமாக உள்ளது.

சரவணபவன் நிறுவனர்ராஜகோபால் குறித்து அவதூறு பரப்பும் வகையில் படம் எடுத்தால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வழக்கறிஞர் கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.