RSS கட்டுப்பாட்டில் இயக்கும் பேஸ்புக்: மேதகு பிரபாகரன் புகைப்படம் பதிவிட்டால் முகநூல் கணக்குகள் முடக்கம்…

0
1108

தமிழீழ விடுதலைப் போராளி மேதகு பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டால், சம்பந்தப்பட்ட முகநூல் கணக்கு உடனே முடக்கப்படும் நிகழ்வு நெட்டிசன்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தமிழீழ விடுதலைப் போராளி, தமிழ்தேசியம் உருவாக்க வேண்டி பெரும்படையை திரட்டி சிங்கள ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டவர் தமிழ்தேசிய தலைவர் பிரபாகரன். போரில் சிங்கள ராணுவம் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து,
மேதகு.பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிங்கள ராணுவத்தால் அறிவிக்கப்பட்டது. இலங்கை நாட்டிலும்,தமிழ்நாட்டிலும் இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவருக்கு பல்வேறு தமிழ்தேசிய அமைப்புகள்,தமிழ் உணர்வாளர்கள் அவரை இன்றும் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு போற்றி வணங்கி வருகின்றனர்.
அத்தகைய மேதகு. பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்தநாள் இன்று.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு, முகநூலில் பிரபாகரன் அவர்களின் புகைப்படங்களை பதிவிட்ட முகநூல் கணக்குகளை சில நிமிடங்களிலேயே #Facebook நிறுவனம் முடக்கியுள்ளது.

RSS எனப்படும் சங்பரிவார் அமைப்பு காட்சி ஊடகங்கள் (News Channel), அச்சு ஊடகங்கள் (News Paper) உள்ளிட்டவற்றை தன் கட்டுப்பாட்டில் வைத்து இயக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

தற்போது முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை ஆளும் ஒன்றிய அரசு பிஜேபி, தங்கள் அரசுக்கு எதிரான கருத்துப் பதிவுகளை நீக்க வேண்டுமென ஆராஜகத்தில் ஈடுபட்டதும், ஒன்றிய அமைச்சர்கள் டுவிட்டருக்கு பயந்து, “கூ” செயலிக்கு மாறியதும் நாம் அறிந்த ஒன்றே.

தற்போது மேதகு பிரபாகரன் மீது ஆதீத வெறுப்புக் கொண்டு இந்துதுவா அமைப்புகள் இவ்வாறு மக்களை மிரட்டப் பார்கிறார்கள் என நெட்டிசன்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.

ஒரு புகைப்படத்திற்கும், ஒரிரு கருத்து வாசகங்களுக்கும் ஆளும் பிஜேபி அரசு அச்சப்படுவதாகவும் இணையதளவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here