மரணடைந்த சினிமா விமர்சகர் கௌசிக் யார் இவர்? தமிழ், தெலுங்கு திரையுலகினர் இரங்கல் தெரிவிக்க என்ன காரணம்

0
209

மரணடைந்த சினிமா விமர்சகர் கௌசிக் யார் இவர்? 

சென்னை

பிரபல தமிழ் சினிமா விமர்சகர் மற்றும் தொகுப்பாளர் கௌசிக் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

தனியார் ஊடகங்களில் பணிபுரிந்துகொண்டிருந்த கௌசிக் சினிமா விமர்சகராகவும், சினிமா டிராக்கராகவும் அறியப்பட்டுவந்தார். ட்விட்டர் போன்ற வலைதளங்கள் மூலம் சினிமா தொடர்பான தகவல்களை வெளியிட்டு ஆக்டிவாக இருந்தார். இதனிடையே, நேற்று மதியம் மாரடைப்பால் உறக்கத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். அவரின் மரணம் ஊடக துறையிலும் மட்டுமில்லாமல் சினிமாத் துறையிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராகவா லாரன்ஸ், துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், அதிதி ராவ் ஹைதாரி, வெங்கட் பிரபு உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கௌஷிக் தனது திரைப்பட விமர்சனங்கள் மற்றும் தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்களுடன் நேர்காணல்கள் மூலம் பிரபலமானவர்.

ரோகினி மற்றும் கருணாகரன் நடிப்பில் வெளிவரவிருக்கும், ஜிவி 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கௌஷிக் எல்எம் கலந்து கொள்ளவிருந்தார். ஆனால், அவர் நிகழ்ச்சிக்கு வராததால், அவரது நண்பர்கள் அவருக்கு போன் செய்துள்ளனர். ஆனால் எந்த பதிலும் இல்லை.

அவர் மதியம் 2 மணியளவில் தூங்கச் சென்றார், அதன்பிறகு எழுந்திருக்கவில்லை,” என்று அவருடன் இருந்த நண்பர் கூறினார். அடிப்படையில் கௌசிக் ஒரு பொறியியல் பட்டதாரி. பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலில் திரைப்பட விமர்சராக தனது மீடியா வாழ்க்கையைத் தொடங்கினார்.

பொறியியல் படித்துள்ள கௌசிக் சினிமா மீதான ஆர்வத்தால் அந்தத் துறையில் இருந்து வெளியேறி சினிமா தொடர்பான எம்பிஏ படிப்பை முடித்து பிரபல ஊடகங்களில் பணியாற்றி வந்தார். இதனிடையே, நேற்று திரைப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்துள்ளார் கௌசிக். இதற்கான நண்பர்கள் அவரைத் தொடர்புகொள்ள முயன்றனர். ஆனால், படுக்கையில் தூக்கத்திலேயே அவர் உயிரிழந்த செய்தி தான் அவர்களுக்கு கிடைத்துள்ளது.

கலட்டா யூடியூட் சேனல் தனது ட்வீட்டர் பக்கத்தில்’ புகழ்பெற்ற திரைப்பட விமர்சகர், திரைப்பட டிராக்கர் மற்றும் கலாட்டா VJ கெளசிக் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு எங்களுக்கு தனிப்பட்ட இழப்பாகும், இந்த நேரத்தில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு கலாட்டா’ ஆழ்ந்த இரங்கலையும் வலுவான ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தொகுப்பாளர் டிடி, கீர்த்தி சுரேஷ்  ஆகியோரும் கெளசிக்கு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.