பத்திரப் பதிவு அலுவலகங்கள் இனி சனிக்கிழமையும் செயல்படும்- கூடுதல் கட்டணத்துடன்

0
156

தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி சனிக்கிழமையும் செயல்படும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி்தெரிவித்துள்ளார்.

சார்பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை மட்டும் ரூ 1,000 கட்டணமாக வசூலிக்கப்படும்.

சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு.

பதிவுத் துறையில் ஆவண எழுத்தர் உரிமங்கள் புதிதாக வழங்கப்படும்.

பதிவுத்துறையில் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகள், தவறான ஆவணப் பதிவுகளை கண்டறிந்து சரி செய்ய சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது;

வணிக வரி, பதிவுத்துறை அரசுக்கு வருவாய் ஈட்டுவதில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.

எனது விலைப் பட்டியல் எனது உரிமை” என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.

வரி ஏய்ப்பை கண்டுப்பிடிக்க தேசிய தகவல் மையம் உருவாக்கியுள்ள GST மென்பொருள் வாங்கி பயன்படுத்தப்படும்.