தமிழக அரசை பாராட்டும் ரஜினிகாந்த்

0
96

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு, நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சீனாவின் உகானில் உருவான கொரோனாவுக்கு இதுவரை 2.5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட வெளிநாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா தற்போது இந்தியாவிலும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 194 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதில் தமிழகத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கும் டெல்லியில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது சென்னையில் 3 ஆவதாக ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா குறித்து நடிகர் ரஜினிகாந்தின் ட்விட்டர் பதிவில்,தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மிகவும் பாராட்டத்தக்கவை என்றும், அரசுடன் மக்களாகிய நாம் இணைந்து, கொரோனா பரவாமல் தடுக்க வேண்டும், என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால், அது அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் எனவும், ரஜினி காந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here