கொரோனா அறிகுறி? திருமணம் முடிந்தவுடன் தனிமை படுத்திக்கொண்ட மணப்பெண்!

0
137

சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த 26 வயது பெண் சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அவரது 28 வயதான உறவினருக்கும் திருமணம் செய்ய கடந்த ஜனவரி மாதம் உறவினர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த 21ம் தேதி சென்னையில் இருந்து மணப்பெண் மற்றும் அவரது உறவினர்கள் சேலம் வந்தனர். அப்போது தலைவாசல் நத்தக்கரை சோதனை சாவடி மையத்தில் பரிசோதனை செய்தனர் அதில் மணப்பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. அவருடன் வந்த 12 பேரில் 9 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. மேலும், நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கி வீடு உள்ளிட்ட சுற்றுவட்ட பகுதிகளில் கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது.

மணப்பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் திருமணம் முடிந்ததும் அந்த பகுதியில் நோய் தடுப்பு பணி முழுமையாக மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் சமூக இடைவெளியில் 5 பேருடன் திருமணம் நடத்திக்கொள்ளவும் அனைவரும் அவர்களது வீடுகளில் தனிமை படுத்திக்கொள்ளவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர். அதன்படி இன்று காலை திருமணம் முடிந்தவுடன் மணப்பெண் அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here