சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க, தொடர்ந்து இரண்டாவது வாரமாக அரசு பேருந்தில் பயணித்து அலுவலகம் சென்றுள்ளார் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா.
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வாரத்தில் திங்கள்கிழமை ஒருநாள் அரசு அதிகாரிகள் வாகனங்களை பயன்படுத்தாமல் சைக்கிளில் சென்று அல்லது பொதுப் பேருந்தில் அலுவலகம் வரவேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தி அலுவலகம் வருதல், சைக்கிளில் அலுவலகம் வருதல் என பல வழிகளில் பயணங்கள் மேற்கொண்டு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

அந்த வகையில்,மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ரா.லலிதா தொடர்ந்து 2வது வாரமாக திங்கள்கிழமை தோறும் பேருந்தில் பயணித்து அலுவலகம் சென்றதற்கு, பொது மக்கள் மாவட்ட ஆட்சியரை பாராட்டினர்.
அவரை தொடர்ந்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் காற்று மாசுவை கட்டுப்படுத்துவது குறித்து விழிபபுணர்வு ஏற்படுத்தவும், மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்திலிருந்து மிதிவண்டியில் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்திற்கு சென்றுள்ளார் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன்.
