மக்கள் ஒன்றிணைந்து மகா சக்தியை வெளிப்படுத்த வேண்டும்: பிரதமர்

0
373

நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பிரதமா் மோடி நாட்டு மக்களுக்காக காணொளி காட்சி மூலம் உரையாடினார்.

உலகளவில் கொரோனா தொற்று பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பாரத பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

பிரதமர் மோடியின் உரையிலிருந்து….

ஊரடங்கு உத்தரவை மக்கள் மதித்து அதனை பின்பற்றி வருவதற்கு நன்றி…

மத்திய, மாநில அரசுகள் பிறப்பிக்கும் கட்டுப்பாடுகளை மதிக்கும் மக்களுக்கு பாராட்டுகள்…

கொரோனா தொற்று பரவலைத் தடுக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து யுத்தம் நடத்துவதற்கு நன்றி.

கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக விளங்குகிறது.

வரும் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து விடுங்கள்.

வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில், அகல் விளக்கு அல்லது டார்ச் அல்லது செல்லிடப்பேசி அல்லது மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்.

மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களது மகா சக்தியை வெளிப்படுத்த வேண்டும்.

வரும் ஞாயிற்றுக்கிழமை விளக்குகளை ஒளிர விடும் போது உருவாகும் பிரகாசம், கொரோனா ஏற்படுத்திய இருளை விரட்டும்

லஷ்மண் கோடு எனப்படும் சமூக இடைவெளியை மக்கள் எப்போதும் பின்பற்ற வேண்டும் ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here