OTTல் வெளியாகும் படங்களுக்கு கட்டுப்பாடு: பாதுகாப்பு அமைச்சகம் கடிதம்…!

0
451

ராணுவத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்களுக்கு தங்களிடமும் தடையில்லா சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கும்படி மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

தற்போது OTT தளங்களில் வெப் சீரிஸ் வெளியாகி மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது. நேரடியாக OTTல் வெளியிடும் திரைப்படத்திற்கும், வெப் சீரிஸ்-க்கும் தணிக்கை செய்யப்படுவதில்லை. இதனால் பிறரை இழிப்படுத்தும் விதமாகவும், ஆபாசமாகவும் தொடர்ந்து வெப் சீரிஸ்கள் வெளிவருகின்றன. இதற்கு தணிக்கை வேண்டும் என பல தரப்பும் குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், ராணுவத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்களில் இந்திய ராணுவத்தை அவமதிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறுவதை தவிர்க்கும் பொருட்டு இனி இவற்றை வெளியிடுவதற்கு முன் தங்களிடமும் தடையில்லா சான்றிதழ் வாங்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. ராணுவம் குறித்த தவறான செய்திகளை வெளியிடுவதைத் தடுக்கவும், ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் மனதைக் காயப்படுத்தாமல் தவிர்க்கவே இதை வலியுறுத்துவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here