திரைத்துறையில் காலடிப் பதிக்கும் தமிழக ஒலிம்பிக் விளையாட்டு வீரர்:

0
385

எண்ணற்ற கனவுகளுடன் கலைத்துறையில் நுழைந்து சாதித்தவர்களுடன், விளையாட்டு வீரர்களும் தற்போது இணைந்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான “Friendship” என்ற படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளரீன ஹர்பசன் சிங் நடித்து இருந்த்தார். வேகபந்து வீச்சாளரான “ஸ்ரீகாந்த்” கூட சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.இந்த பட்டியலில் அமைச்சர் படத்தின் மூலம் பிரபல விளையாட்டு வீரர் டாக்டர்.மா. ரா. சௌந்தரராஜன் அவர்களும் இணைந்துள்ளார்.

இந்தியாவிற்காக பாரா ஒலிம்பிக்கில் ஜெர்மனியில் முதல் தங்கப்பதக்கம் வென்ற டாக்டர்.மா.ரா சௌந்தரராஜன்.

இவர், தற்போது தமிழ் சினிமாவில் அமைச்சர் என்கிற படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும், லெமுரியா கண்டம் மற்றும் பெயர் வைக்கப்படாத மேலும் இரண்டு படங்களிலும் நடிக்கிறார்.

டாக்டர்.மா.ரா சௌந்தரராஜன் கின்னஸ் ரிகார்டு,லிம்கா புக் ரிகார்டு,பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம்,உலக சாம்பியன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

சிறு வயதில் எந்த சைக்கிள் மூலம் அவருடைய  வாழ்க்கையில் விதி விளையாடியதோ அந்த சைக்கிள் துறையில் இடைவிடாத தன்னம்பிக்கை  மூலம் உலக அளவில் பிரபலமானவர்  என்பது குறிப்பிடத்தக்கது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here