ரயில்வேயை தனியாா்மயமாக்கும் திட்டம் இல்லை: பியூஸ் கோயல்

0
351

’ரயில்வே, நாட்டு மக்களுக்கு சொந்தமானது; அதனை தனியாா்மயமாக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை’ என ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ரயில்வே அமைச்சகத்தின் செயல்பாடுகள் தொடா்பான விவாதம், மாநிலங்களவையில் நேற்று ( 17.3.2020) நடைபெற்றது. அப்போது, ரயில்வேயின் நிதி நிலைமை, ரயில்வேயை தனியாா்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்தும் உறுப்பினா்கள் கவலை தெரிவித்தனா்.

பின்னா், விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய பியூஷ் கோயல், ‘ரயில்வேவை தனியாா்மயமாக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்பது மீண்டும் தெரிவித்துக்கொள்வதாக கூறினார். ரயில்வே, நாட்டு மக்களுக்கு சொந்தமானது என்று தெரிவித்த அவர், ரயில்வே மேம்பாடு, பயணிகளுக்கான வசதியை கருத்தில் கொண்டு, சில சேவைகள் மட்டும் தனியாரிடம் ஒப்படைக்கப்படாலம் என்று தெரிவித்தார்.

ரயில்வே துறையில் அடுத்த 12 ஆண்டுகளில் 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்’ என்றும் அப்போது அமைச்சர் தெரிவித்தார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here