கடலூர் மாவட்டம், பரங்கிபேட்டையில் இருளர் இன மக்களுக்கு போராடி பட்டா வாங்கி கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை மக்கள் தங்கள் நன்றியுடன் சேர்த்து வாழ்த்தி மகிழ்ந்தனர்.
இருளர் இன மக்கள் வாய்க்கால் மேடு என்கிற தங்களது குடியிருப்பின் பெயரை “செங்கொடி நகர்” என பெயர் மாற்றம் செய்தனர்.
இருளர் இன மக்கள், பழங்குடியின மக்கள் போன்ற சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியினரே குரல் கொடுத்து நீதிப் பெற்று தருவதாக அம்மக்கள் பாராட்டி கூறினர்.
