ஆபாசமாக பேச்சுக்கள் அடுக்கடுக்கான புகார்கள்; ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது காதலன் இருவரும் மதுரையில் கோவை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் அடுத்த அய்யம்பாளையம் அருகே உள்ள சபரி நகரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் சமூக வலைதளமான டிக்டாக்கில் சூர்யா என்ற பெயரில் மிகவும் பிரபலமானவர். இவரது டிக்டாக் வீடியோக்களால் ‘ரவுடி பேபி’ சூர்யா என அழைக்கப்பட்டார். நாளடைவில் அதனையே தனது பெயராக மாற்றினார் சூர்யா.
திருப்பூரைச் சேர்ந்த ரவுடி பேபி சூர்யா, மதுரையைச் சேர்ந்த சிக்கா என்பவருடன் மதுரை திருநகரில் வசித்து வந்தார். டிக்டாக் பிரபலமான இவர்கள், டிக்டாக் தடைக்கு பின் யூடியூப் மூலம் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.
பெரும்பாலும் காமெடி என்ற பெயரில் ஆபாச வார்த்தைகளை இவர்கள் பயன்படுத்துவதாகவும், தனிப்பட்ட சிலர் மீது அவதூறு பரப்புவதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இவர்களை கைது செய்யக்கோரி பலர் புகார் அனுப்பி இருந்தனர்
அதன்பேரில் ரவுடிபேபி சூர்யா மற்றும் சிக்கா மீது கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் பெறப்பட்டது மதுரை விரைந்த கோவை போலீசார், ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது முன்னாள் காதலன் சிக்காவை கைது செய்து தற்போது கோவை அழைத்து வருகின்றனர்.