நீட் தேர்வு என்றால் என்ன? நீட் தேர்வு – 2022ம் ஆண்டுக்கான முழு விவரங்கள் மற்றும் இலவச பயிற்சி தொடர்பான அறிவிப்புகள்

0
765

FREE COACHING – UPSCTNPSCNEETJEE & NDA

நீண்ட எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது துணை 18 ஆட்சியர், 26 டிஎஸ்பி உள்பட 92 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு

NEET (National Entrance Cum Eligibility Test)

இந்திய மருத்துவக் குழுமம் சட்டம் – 1956-ன் 2018 திருத்தம் மற்றும் பல் மருத்துவர் சட்டம் 1948-ன் 2018 திருத்தம் ஆகியவற்றின்படி அகில இந்திய அளவிலான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வானது, இந்திய அரசின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழான, அகில இந்திய மருத்துவக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான (அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் மருத்துவக் கல்லுாரிகள் (AIIMS) மற்றும் ஜவஹர்லால் பட்டமேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JIPMER) நீங்கலாக) சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதற்காக நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படுகிறது.

இந்தியாவில் இருக்கும் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவப் படிப்புகளை (MBBS / BDS / BAMS / BSMS / BUMS / BHMS) படிப்பதற்கும் நீட் தேர்வு அவசியம். இதில் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் மருத்துவக் கல்லுாரிகள் (AIIMS – All India Institute Of Medical Science) மற்றும் ஜவஹர்லால் பட்டமேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JIPMER – Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research) ஆகிய பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களும் அடங்கும். இந்தியாவில் மட்டுமின்றி இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகள் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் இத்தேர்வு அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்விற்கு (All India Pre Medical Test (AIPMT)) மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வானது அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும். தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று அரசுதெரிவித்தது

NTA (National Testing Agency)

தேசியத் தேர்வு முகமை என்னும் தனித்து செயல்படும் அமைப்பு தான் இந்தியாவில் நீட் தேர்வை நடத்துவது தொடங்கி அதற்கான முடிவுகளை வெளியிடுவது வரை நீட் தொடர்பான செயல்பாடுகளை கவனித்து வருகிறது. இந்த அமைப்பை இந்தியாவின் கல்வி அமைச்சகம் (முன்னதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என்ற பெயரில் இருந்தது) தான் உருவாக்கியது. முன்னதாக மருத்துவப் படிப்புகளுக்கு இருந்த அனைத்து விதமான நுழைவுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு நீட் தேர்வே பிரதான தேர்வாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-UG தேர்வும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-PG தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது.

13 Indian Languages

மொழிகள்: இந்தியா முழுவதும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, ஒடியா, உருது, பெங்காலி, தெலுங்கு, கன்னடா, அஸ்ஸாமி மற்றும் குஜராத்தி ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வை எழுத முடியும். 2021-ல் இருந்து பஞ்சாபி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் சேர்க்கப்பட்டு மொத்தம் 13 மொழிகளில் நீட் தேர்வை எழுத முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEET (UG) – 2022

நீட் தேர்வு – 2022: இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு வருகின்ற ஜூலை 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்கியுள்ளது. தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் (neet.nta.nic.in) சென்று மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும்.

Time Extended

தேர்வு எழுதும் நேரம் அதிகரிப்பு: நீட் தேர்வுகள் ஓ.எம்.ஆர். தாள்கள் மூலம் நடத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும் என்றும் தேர்வு எழுதுவதற்கான நேரம் 200 நிமிடங்களாக(3 மணி நேரம் 20 நிமிடங்கள்) அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் 3 மணி நேரம் மட்டுமே தேர்வு நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 20 நிமிடம் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FREE COACHING

தமிழகத்தில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எஸ்.ஏ.எல்.எஸ். கல்வி நிறுவனம் (SALS Educational Academy) பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் நீட் மறுதேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை இணைய வழியிலும், நேரடியாகவும் அளித்து வருகிறார்கள். நீட், ஜெஇஇ, என்டிஏ, ஐசிஏஆர் உள்ளிட்ட பல நுழைவுத்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்குகிறார்கள்.

இந்நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில் ஆகஸ்ட் 15, 2022 முதல் துவங்கும் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி, நீட், ஜேஇஇ மற்றும் என்டிஏ தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில் இணைய விரும்பும் முதல் 100 மாணவர்களுக்கு பயிற்சியை இலவசமாக வழங்குகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் மாதந்தோறும் புதிய பேட்ச்களை துவங்குவதால் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு நீங்கள் வெறும் 1000 ரூபாய் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொண்டால் போதும், வேறு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. இந்த சலுகையானது முதலில் பதிவு நூறு மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். பயிற்சியில் இணைய விரும்பும் மாணவர்கள் +91 7550009137 என்ற வாட்ஸஅப் எண்ணிற்கு உங்களது பெயர், ஊர், தொடர்பு எண், பள்ளியின் பெயர் முதலியவற்றை அனுப்பவும்.

மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்

நீட் தேர்வு என்றால் என்ன? நீட் தேர்வு – 2022-23ம் ஆண்டுக்கான முழு விவரங்கள் மற்றும் இலவச பயிற்சி தொடர்பான அறிவிப்புகள்

நீட் தேர்விற்கு இலவச பயிற்சி பெற விரும்பும் அரசு பள்ளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கவனத்திற்கு NEET – National Eligibility cum Entrance Test

ஜேஇஇ தேர்விற்கு இலவச பயிற்சி பெற விரும்பும் அரசு பள்ளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கவனத்திற்கு JEE – Joint Entrance Examination

என்டிஏ தேர்விற்கு இலவச பயிற்சி பெற விரும்பும் அரசு பள்ளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கவனத்திற்கு NDA – National Defence Academy

டி.என்.பி.எஸ்.சியில் எத்தனை குரூப் தேர்வுகள் உள்ளது? எந்தெந்த குரூப் தேர்வுகளுக்கு என்னென்ன வேலை கிடைக்கும் உங்களுக்கு தெரியுமா? #TNPSC

எங்க இணையதளத்த பாக்குறது மட்டுமில்லாம போறபோக்குல எங்க சமூக வலைதள பக்கத்தையம் லைக் ஷேர் பண்ணிட்டு போங்க!

முகநூல் 
ட்விட்டர்
வலைஒளி
இன்ஸ்டாகிராம்

– அன்புடன் தொடப்பகட்டை.காம்