NAAC அங்கீகாரம் பெறுவதில் மோசடியா? தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்தது என்ன?

0
2740

NAAC அங்கீகாரம் பெறுவதில் மோசடியா? தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்தது என்ன?

National Assessment and Accreditation Council (NAAC) எனப்படும் தேசிய தர மதிப்பீடு கவுன்சிலானது, கல்லூரிகளின் தரத்தை நிர்ணயம் செய்து வருகிறது. பொதுவாக விருப்பமுள்ள கல்லூரிகள் மட்டுமே நாக் மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து, அந்த தரச்சான்றை பெற்று வைத்துக் கொள்ளும். நாக் தரச்சான்று பெற்றுள்ள கல்வி நிறுவனங்கள், யுஜிசியின் மூலமாக கூடுதல் நிதி உதவி, மத்திய அரசின் சலுகைகளை பெற முடியும்.

கல்லூரிகளின் நிர்வாகம், பாடத் திட்டம், கற்பித்தல், கற்றலின் நிலை, பணியாற்றும் பேராசிரியர்கள், அங்கே மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள், உள்கட்டமைப்பு வசதிகள் எனப் பல்வேறு நிலைகளில் ‘நாக்’ அமைப்பு ஆராயும். இதன் அடிப்படையிலேயே கல்வி நிறுவனங்களுக்கு ‘ஏ ++’, ‘ஏ+’, ‘ஏ; ‘பி++’ ‘பி+’, ‘பி’, ‘சி’, ‘டி’ என ஆறு நிலைகளில் மதிப்பீடுகள் வழங்கப்படும்.

செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் அங்கீகாரம் பெறுவதற்காக விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான மத்திய தர ஆய்வுகள் பிப்ரவரி 25 & 26 முறையே நடக்கிறது.

இந்த ஆயவு கூடத்தில் சம்பந்தப்பட்ட கல்லூரியானது முனைவர் பட்டம் பெற்றவர்களை ஏஜென்ட்கள் மூலம் நியமித்து கணக்கீடு செய்வதாக்கவும் 2நாள் ஆய்வுக்கு இவ்வளவு பணம் என்று பேரம் பேசி நடப்பதாகவும் நமக்கு தகவல் வந்துள்ளது. இதில் முக்கிய திருப்பமாக ஆய்வில் முனைவர் பட்டம் பெற்ற பலரின் சான்றிதழ்கள் போலியானது என்று தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக நிர்வாகத்திடம் நேற்று பேசியபோது சரியான பதில் கிடைக்கவில்லை.

கல்வி நிறுவனத்திற்கு வழங்கப்படும் உயர்தர சான்றிதழ்கள் ஆய்வு செய்து முறையாக சரிபார்ப்பு நடத்தப்படும் அதன் பின் இவர்கள் இதற்கு தகுதியான நபர்கள் என்று சான்று வழங்கப்படும். ஆனால் இங்கு ஆய்வுகளுக்கு போலிகள் பலர் வந்துள்ளனர் என்பதும் இதற்காக தனியா ஏஜென்ட்களை நிர்வாகங்கள் தொடர்பு கொள்கின்றார்.

வேலியே பயிறை மேயும் கதைபோல் இவை உள்ளன என்று கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது சம்பந்தபட்ட ஆதாரங்களையும் ஆய்வுக்கு வந்த நபர்களையும் அதற்காக ஏற்பாடு செய்தவர்கள் பற்றியம் நாம் NAAC, AICTE, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மத்திய உயர்கல்வித்துறைக்கு அனுப்பியுள்ளோம்.

எங்களிடம் வந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாங்கள் தகவல் அளித்துள்ளோம், இதில் உண்மைத்தன்மையை வெளிக்கொண்டு வருவது NAAC_கின் கடமையாகும். போலி சான்றிதழ்கள் புகலிடமாக கல்லூரிகள் மாறிவிடக்கூடாது என்பதற்காகவும் தகுதியான நபர்களுக்கு உரியவை கிடைக்கவேண்டும் என்பதற்காகவும் இந்த புகார்களை அளித்துள்ளோம்.

முனைவர் பட்டம் பெற்ற பலர் அதற்கு தகுதியான ஊதியம் மற்றும் பதவிகள் கிடைக்காமலும் தவிக்கின்றனர். மேல குறிப்பிட்ட சம்பவங்களை கல்லூரிகள் ஆதரிக்கும்பட்சத்தில் தகுதியை ஆசிரியர்களின் வளர்ச்சியை தடுக்க நாமே காரணமாகி விடுவோம்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here