கொரோனா வைரஸ் கொசுக்களின் மூலம் பரவாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது..
சீனாவில் தொடங்கி 24 ஆயிரம் உயிர்களை பலிவாங்கிய கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக நாள் தோறும் பல வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதில் குறிப்பாக மது அருந்தினால் வராது, பூண்டு சாப்பிட்டால் வராது போன்றவை சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டுவருகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் கொசுக்களின் மூலம் பரவும் எனும் வதந்தி கடந்த வாரம் முதல் சமூக தளங்களில் பரவியது. இதற்கு விளக்கமளித்துள்ள மத்திய அரசு கொரோனா கொசுக்கள் மூலம் பரவாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மனிதரிலிருந்து மனிதர் மூலமாகவே இந்த வைரஸ் பரவும் என மீண்டும் தெரிவித்துள்ளது..