“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை வேண்டும்” – நடிகர் விஜய்

0
794

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள மாஸ்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, அடையார் எம்ஆர்சி நகரில் உள்ள லீலா பேலஸில் நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் பலர் பேசினர். நிகழ்ச்சியின் முடிவில் பேசிய நடிகர் விஜய் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே ரசிகர்கள் வருகை தவிர்க்கப்பட்டதாகவும், ரசிகர்கள் வர முடியாமல் வருத்தப்படும் அதே வருத்தம் தனக்கும் இருப்பதாக தெரிவித்தார்.

நண்பர் அஜித் போல் உடை…

மேலும் 20 வருடங்களுக்கு முன்பு இருந்த இளையதளபதி விஜய்யிடம் எதுவும் கேட்க வேண்டெமென்றால் என்ன கேட்பீர்கள் என தொகுப்பாளர் கேட்க, அதற்கு நீண்ட யோசனைக்கு பிறகு பதிலளித்த விஜய் ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை வேண்டும் என்று பதில் அளித்தார். மேலும் என்றைக்கும் இல்லாமல் இன்று கோர்ட் சூட் அணிந்து வந்தது பற்றிய கேள்விக்கு, நண்பர் அஜித் போல கோட் சூட் அணிந்துள்ளதாக பதில் அளித்தார். இதற்கு அரங்கத்தில் கூடியிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here