மதுரையில் பல நாட்களாக எரியாமல் இருந்த தெரு விளக்குகள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்திய 10 நிமிடத்தில் சரி செய்யப்பட்டது

0
163

மதுரையில் பல நாட்களாக எரியாமல் இருந்த தெரு விளக்குகள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்திய 10 நிமிடத்தில் சரி செய்யப்பட்டது.

இரவு நேரங்களில் மதுரை மாநகரம் தெரு விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் விபத்துகளும், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களும் அதிகரித்து வருகின்றன.

இதனை சரிசெய்ய கோரி, மதுரையின் அடையாளமான விளக்குதூண் முன்பு மெழுகுவர்த்தி, செல் டார்ச் வெளிச்சத்தில் நூதனமுறையில்  

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில், இருளில் மூழ்கியுள்ள மாமதுரையில் போர்கால நடவடிக்கையில் மின்விளக்குகளை சரி செய்ய வேண்டும், மின்வாரியத்தில் தனியார் ஒப்பந்தத்தை கைவிட்டு மாநகராட்சியே நேரடியாக பணியாளர்களை நியமித்திட வேண்டும், 10 வருடத்திற்கு மேலாக பணி செய்யும் மின் விளக்கு பிரிவு ஊழியர்களை நிரந்தரபடுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள்  வலியுறுத்தப்பட்டன.

மேலும், ஆர்ப்பாட்டத்தில், அதிமுக ஆட்சியில் “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் விளக்குகள்  பொருத்தப்பட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல்” மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

இந்த நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்திய இடத்தில் பல நாட்களாக எரியாமல் இருந்த மின்விளக்குகள் 10 நிமிடத்தில் சரி செய்யப்பட்டது.

இதனால் அப்பகுதி மக்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருக்கு தங்கள் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்தனர்.