வெகுசிறப்பாக மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று முடிந்தது.
24 காளைகளை பிடித்து கார்த்திக் முதலிடம்; 19 காளைகளை பிடித்து முருகன் 2வது இடம்; 11 காளைகளை பிடித்து பரத் 3வது இடம் பிடித்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி 150 பார்வையாளர்கள் மட்டுமே போட்டியை காண அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக ஒரு சுற்றுக்கு 75 முதல் 100 வீரர்கள் அனுமதிக்கப்படுவர்.
ஆனால் தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால் ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்தப் போட்டியில் நாட்டு மாடுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின்போது 759 பேர் காயமடைந்துள்ளனர். அதில், 17 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயபடைந்த 8 பார்வையாளர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முதலிடம் பிடித்த மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு முதல்வர் முக.ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட்டது.