டி.வி சீரியல்களை பிரபலப்படுத்தும் நியூஸ்-18 செய்தி தொலைக்காட்சி: ஊடக தர்மம் மீறல் 

0
645

தமிழ் செய்தி ஊடகங்கள் சினிமா நடிகர்,நடிகைகள், சீரியல் நடிகைகளை செய்தி தொலைக்காட்சிகளில் பிரபலப்படுத்தி காட்டுவதாக மக்கள் மத்தியில் குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. 

அந்தவகையில், தமிழில் முண்ணனி செய்தி தொலைக்காட்சியான நியூஸ்-18, புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தமிழ், மலையாளம், தெலுங்கு உட்பட 15க்கும் மேற்பட்ட மொழிகளில் செய்தி தொலைக்காட்சிகள் மற்றும் இணைய ஊடகங்களும் செயல்பட்டு வருகின்றன.

விஜய் டிவி. சீரியல்களான பாரதி கண்ணம்மா,பாண்டியன் ஸ்டோர், பாக்கியலெட்சுமி…..

சன். டி.வி சீரியல்களான ரோஜா, சுந்தரி,கயல் போன்ற டிவி. சீரியல்களை பிரபலப்படுத்துவதும், அதை பற்றி மக்களிடம் சேர்பதுமே நியூஸ்-18 தொலைக்காட்சியின் வேலையாக உள்ளது.

நியூஸ்-18 ஊடகத்தின் இணையத்தளத்தில் சீரியல்கள் அப்டேட் தினந்நோறும் முக்கிய செய்திகளாக வெளியிடப்பட்டு வருகின்றன.

மக்களுக்கு தேவையான, பயனுள்ள செய்திகளை வெளியிட வேண்டிய ஊடகங்கள், இப்படி டிவி. சீரியல்களுக்கு தப்பாட்டம் அடிப்பதாக மக்கள் குறை கூறுகின்றனர்.

டிவி. சீரியல் அப்டேட்-களுக்கு நியூஸ்-18 தொலைக்காட்சி ஒரு குறிப்பிட தொகைப் பெறுவதாகவும் ஒரு செய்தி பரவுகிறது.

நியூஸ்-18 தொலைக்காட்சியை போலவே Times of India, சமயம் போன்ற முண்ணனி ஊடகங்களும் சீரியல்களை ஓர் முக்கிய செய்திகளாக வெளியிட்டு, ஊடக தர்மத்தை மீறுவதாக மூத்த பத்திரிகையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்