பெண்கள் தாயக் கட்டை தான்…

0
2585

நாம் நாள்தோறும் நடத்து போற தெருவில், மளிகை சாமன்கள் விக்கிற அண்ணன், மழைப் பெய்யும் போது கூட கீரை விற்க வரும் பாட்டி,செருப்பு தைக்கிற அழுக்கு சண்டை தாத்தா என நிறைய,பேரை பார்த்திட்டு வருகிறோம். ஆனா,சில பேர மட்டும் தான் தினமும் பார்கனும்னு தோணும். துணிக்கடைக்குள்ள போறோமோ இல்லையோ, கடைக்கு வெளிய, லெக்கீன்ஸ் போட்டப் பெண் பொம்மையும்,பார்டி சாரீ கட்டுன அந்த பொம்மையும் யாராக இருந்தாலும் 3 செகண்ட் பார்த்துட்டா தான் போவாங்க. 

“நவீன காலத்து பெண்கள், கார்பரேட் உலகின் வியாபாரப் பொருள்” என்ற நிலை 21ஆம் நூற்றாண்டில் உருவாகியுள்ளது. தலைநகர் சென்னை போன்ற பெருநகரங்களில், மால், ஷாப்பிங் காம்லக்ஸ்,கார்,பைக் ஷோரூம்கள் அவ்வளவு ஏன்? ஆண்கள் உள்ளாடை விற்பனை நிலையத்திலும் பெண் தான், அதுவும் இளம் பெண்கள் தான் நிறுத்தப்பட்டு இருக்கிறாங்க. 

நமக்கு பிடிக்குதோ இல்லையோ,பத்துத்தோ பத்தலியோ,வீட்டில் ஏதும் சொல்லுவாங்களோ மாட்டாங்களோ அந்த டைட்டானா டிரஸ், ஜீன்ஸ் போட்டு தான் இந்த காலத்து நடுத்தர இளம்பெண்கள் வேலையிடத்தில் வேலை பார்த்தாக வேண்டும்.அதில் பெண்களுக்கு ஆடை என்பது நிர்பந்தமாகவும், திணிக்கப்படுவதுமாக இருப்பது தான் கொடுமை.

“உடலை ஓட்டிக் கொண்ட டி-சர்ட், கால்களை கவ்விப் படிக்கும் பேண்ட் இது தான், செல்போன் விற்பனை நிலையங்கள், பல்பொருட் அங்காடிகள், தொலைக்காட்சி, கார் போன்ற விற்பனையகங்கள், இவ்வளவு ஏன் பசங்க ஒட்டும் பல்சர் பைக் விற்பனை நிலையத்திலும் பெண் இருந்தால் ஆண்களை கவரும் விதத்தில் உடை அணிய வேண்டுமாம்.

“ஒரு திரைப்பட நடிகை அல்லது அழகிய, கவர்ச்சியான பெண்களை சொன்னால், விளம்பரத்தின் மூலம் எந்தவொரு பொருள் ஆனாலும் விற்கலாம்.பெண்கள் எங்கும், எப்போதும் வியாபாரப் பொருட்களாக தான் இருக்கின்றனர்.
உடையில் என்ன உள்ளது, அவரவர் சுதந்திரம், அவரவர் சௌகரியம் என்று சொல்லிவிட முடியும்.ஆனால், 8ஆயிரம் ரூபாய்,10 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்காக அவ்வாறு உடை அணிந்து, ரெடிமெட் புன்னகை  உடன் வாழ்த்து வரும் இளம்பெண்களை நீங்கள் சற்று கவனித்தது உண்டா?

12ஆம் வகுப்பில் பள்ளியின் முதல் மாணவி, இருந்தும் என்ன பயன் கல்லூரியில் படிக்க வைக்க தந்தை இல்லை,யாரும் இல்லை. வீட்டில் அருகில் உள்ள செல்போன் ரீசார்ஜ் செய்யும் கடையில் வேலைக்கு சேர்ந்தாள்.பளீச்சென்று டிரஸ் பண்ண வேண்டும், பவுடர் அடிக்க  வேண்டும், தலைமுடி மார்டனாக வாரியிருக்க வேண்டும் என்ற கண்டிஷன்களுடன் வேலைக்கு சேர்ந்தாள்.கடைக்கு அதிகளவில் ஆண்கள் வருவதால், ஆண்களிடம் நல்லா பக்குவமா பேச வேண்டும் என்னும் பல நிபந்தனைகள் அந்த 17 வயது பெண்ணுக்கு இல்லை மன்னிக்கவும் அந்த சிறுமைக்கு ஜெராக்ஸ் கடை,புத்தகக்கடை, வீட்டுப் பொருட்கள் விற்கும் கடை என பல்வேறு இடங்களிலும் இதே கூத்து தான்.

டிரஸ் வாங்க போனா,அங்க இருக்கிற லேடீஸ் பர்ஃபியூம்,லிப்ஸ்டிக் பக்கம் போய் ஒரு விசிட் அடிச்சுட்டு வருவது வழக்கம்.அங்க இருக்கிற பெண்களுக்கு “என்ன சார், வேணும்” என்ற கரிசன குரலுடன் கேப்பாங்க.(முன்னாடி அண்ணா என்று கூப்பிட்ட சொல் மறைந்து இப்போ முழுவதும் சார் என்று மாறியுள்ளது)
அவர்களோட உடைகளை பார்க்கின்ற நம்மவர்களில், எத்தனை பேர் அந்த பெண்கள் என்ன நினைப்பாங்க, ஏன் இவங்க இப்படி நடத்துக்கனும்னு நினைச்சு பார்த்திருப்போ?

பெண்கள் உடை அணிவது நாகரீகம், பரிணாம வளர்ச்சி என்பதை தாண்டி, அவள் அணியக் கூடிய உடையும் ஒரு வியாபாரப் பொருளாகவே மாறிவிட்டது.

“பெண்கள் நம் நாட்டின் கண்கள், பெண்மையை போற்றுவோம் என நிறைய பேசுவோம்.ஆனால், பெண்கள் தொலைக்காட்சி, பத்திரிக்கை,விளம்பரங்களில் காட்சிப் பொருளாகவே மாறியுள்ளனர். பாத்திரம் தேய்க்கும் சோப் விக்க பெண் தேவை.நடுபக்கத்தை அலங்கரிக்க பெண் தேவை,நிகழ்ச்சி என்றால் வாசலில் நின்று, விருந்தினருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்க பெண் தேவை.என்ன செய்வது குடும்ப சூழல் ஆண்களின் அந்த பார்வைக்கு பெண்கள் இரையாக தான் செய்கின்றனர்.

இப்படி பெண் என்பவள் உருட்டும் தாயக் கட்டைப் போல,சுழன்று கொண்டு தான் இருக்கிறாள். அவளுக்கு மட்டும் விழுவது பூஜ்யம் தான். பெண் என்பவள்  இந்த சமுதாயத்தை பொருந்த வரையில் ஒரு வியாபாரப் பொருள் தான்.இந்த சமுதாயத்தில் வாழும்,பெண்கள் மீது உடல் ரீதியாக நடைபெறும் அத்துமீறல்கள் காட்டிலும், தொடாமல் தவறான பார்வைகளால் நடைபெறும் துன்புறுத்தல்களே அதிகம் என்று ஒரு மென்பொருள் நிறுவனம் ஆய்வறிக்கையில் நமக்கு தெரிவிக்கின்றது.

ஆண்கள் பார்த்தால் என்ன? அப்படி பொசுங்கி செத்துவிடாவா போறோம் என்று கூறும் பெண்கள் மிக குறைவு தான்.தாயக் கட்டையாக உருட்டி விளையாடப்படுக்கிறது பெண்களின் இளமை பருவம். இளம்பெண்கள் மிகச்சிறந்த வியாபாரப் பொருட்கள் என்று கண்டிப்பிடித்து கொடுத்த சினிமாக் காரங்களுக்கும்,  கார்பரேட் கம்பெனிகளும் ஒரு தனி நன்றி சொல்ல வேண்டும். 

சிலர் லாபம் பார்க்க மறைமுகமாக உருட்டப் பட்ட தாயக் கட்டை எப்போது தான் நிற்க போகிறதோ?.

கவிஞர் மைக்கேல் மனோஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here