இந்திய அளவிலான தமிழ் சிறுகதைப் போட்டி: மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000/

0
791

notionpress & BYNGE செயலி இணைந்து வழங்கும் தேசிய அளவிலான தமிழ் சிறுகதைப் போட்டி

இந்தியாவின் அடுத்த மாபெரும் தமிழ் எழுத்தாளருக்கான தேடல் இது.

விதிமுறைகள்

1. காதல், திரில்லர், குடும்பம், நகைச்சுவை, வரலாறு என நீங்கள் விரும்பும் வகைகளில் சிறுகதைகள் எழுதலாம். 

2. ஒருவர் எத்தனை சிறுகதைகள் வேண்டுமானாலும் எழுதலாம்.

 3. 750- 2,000 வார்த்தைகள் அளவில் சிறுகதை இருக்க வேண்டும்.

4. அச்சு, இணையம்,மின்னிதழ், கிண்டில், ஒலிப் புத்தகம் என எந்த வடிவிலும் வெளிவராத சிறுகதைகளாக இருக்க வேண்டும். போட்டி முடிவு வெளியாகும் வரை வேறு எங்கும் பிரசுரிக்கக் கூடாது. உங்களுடைய சொந்தக் கற்பனையாக இருக்க வேண்டும். வேறு எதனுடைய பிரதியாகவோ தழுவலாகவோ இருக்கக் கூடாது. 

5.உங்கள் சிறுகதைகளை https://notionpress.com/ta/short-stories/ssc-tamil/all/view என்ற தளத்தில் பதிவு செய்யுங்கள். 

பதிவு செய்வதற்கான கடைசி நாள்: 10-07-2022 

6. தளத்தில் எவ்வளவு பேர் வாசிக்கிறார்கள், வாசகர்கள் தரும் மதிப்பீடு என்ன ஆகியவற்றைப் பொறுத்தும், நடுவர்களின் மதிப்பெண்களை அடிப்படையாக வைத்தும் சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்படும். நடுவர்கள் முடிவே இறுதியானது.

7. தேர்வாகும் சிறுகதைகள் அனைத்தும் அச்சுப் புத்தகமாகவும், மின் புத்தகமாகவும் கொண்டுவரப்படும். பின்னர், BYNGE செயலியிலும் வெளியாகும். 

8. போட்டி குறித்தான சந்தேகங்களுக்கு echo@bynge.in என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளுங்கள். 

பரிசு விவரங்கள்:

அடுத்த மாபெரும் எழுத்தாளர் பரிசுத்தொகை: ரூ.25,000/

ஆசிரியர் குழுவின் தேர்வு : ரூ. 15,000/,

வாசகர்களின் தேர்வு : ரூ.10,000/ 

ஆறுதல் பரிசு : அச்சுப் புத்தகம் & சான்றிதழ் (22 பேருக்கு)