கேள்விக் குறியாக்கும் இந்திய பொருளாதாரம்: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

0
101

நீட் தேர்வு என்றால் என்ன? நீட் தேர்வு – 2022ம் ஆண்டுக்கான முழு விவரங்கள் மற்றும் இலவச பயிற்சி தொடர்பான அறிவிப்புகள்

நீட் தேர்விற்கு இலவச பயிற்சி பெற விரும்பும் அரசு பள்ளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கவனத்திற்கு NEET – National Eligibility cum Entrance Test

டி.என்.பி.எஸ்.சியில் எத்தனை குரூப் தேர்வுகள் உள்ளது? எந்தெந்த குரூப் தேர்வுகளுக்கு என்னென்ன வேலை கிடைக்கும் உங்களுக்கு தெரியுமா? #TNPSC

ஜேஇஇ தேர்விற்கு இலவச பயிற்சி பெற விரும்பும் அரசு பள்ளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கவனத்திற்கு JEE – Joint Entrance Examination

என்டிஏ தேர்விற்கு இலவச பயிற்சி பெற விரும்பும் அரசு பள்ளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கவனத்திற்கு NDA – National Defence Academy

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குவீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டாலர் சரிவில் இருந்து மீண்டு வருவதாலும், பத்திர லாபம் அதிகரித்து வருவதாலும் இன்று வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து விட்டதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:

அமெரிக்க நுகர்வோர் விலை பணவீக்கம் 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உயர்ந்து ஆண்டு அடிப்படையில் 8.6%ஐ எட்டியது. கடந்த வாரம் டாலர் குறியீடு உயர்ந்தது. பத்திர லாபம் 3.15 சதவீதம் உயர்ந்ததை அடுத்து, டாலர் குறியீடு மீண்டும் 104 மதிப்பெண்களைத் தாண்டியது. அமெரிக்க டாலருக்கு நிகரான ஜப்பானின் யென், இங்கிலாந்தின் யூரோ ஆகியவற்றின் மதிப்பும் சரிவைச் சந்தித்தது.

மறுபுறம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கை, உள்நாட்டு பங்குச் சந்தைகளில் விற்பனை மற்றும் உலகளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு ஆகியவற்றின் தாக்கத்தால் ரூபாயின் மதிப்பும் சரிந்தது.

நமது அந்நியச் செலாவணி கையிருப்பும் கடந்த வாரம் குறைந்து, ரூபாயின் மதிப்பு சரிந்தது. இந்த வாரம் ரூபாயின் மதிப்பு பலவீனமாக இருக்கும் என்றும், 78.20-78.50 என்ற அளவைத் தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 1485 புள்ளிகள் குறைந்து 52,817 ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீட்டு எண் 416 புள்ளிகள் குறைந்து 15,785ஆகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.