கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் : மாமல்லபுரத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலம்: பாதுகாப்பு பணியில் 100 பவுன்சர்கள்

0
154

மாமல்லபுரத்தில் நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலமாக நடைபற்றது. இந்திய திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

மூன்றுநாள் திருமண நிகழ்ச்சி நடந்தது.
நேற்று முன்தினம் திருமணத்திற்கான மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று வரவேற்பு நிகழ்ச்சியும், இன்று திருமண நிகழ்வும் நடந்தன. நயன்தாராவின் மேக்கப்பிற்காக மும்பையில் இருந்து மேக்கப் ஆர்ட்டிஸ்ட் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

குறிப்பாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்டவர்களுக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக பணியாற்றியவர்கள் நயன்தாராவிற்கு ஒப்பனை செய்தனர்.

நிறைய கட்டுப்பாடுகள் இந்த திருமணத்திற்கு வெளியாட்கள் யாரும் பங்கேற்க அழைப்பு இல்லை. திருமணத்திற்கு வருபவர்கள் அலைப்பேசி, கேமரா உள்ளிட்டவைகளை கொண்டு செல்ல அனுமதி இல்லை.

முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்ட நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதி அளிக்கப்பட்டனர்.

மேலும் திருமணத்திற்கு வருபவர்கள் பாரம்பரிய உடையணிந்து வரும்படி மணமக்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான நபர்கள் அப்படியே பங்கேற்றனர். திருமணம் நடைபெறும் கடற்கரை விடுதியை சுற்றி 100க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த திருமண நிகழ்வு ஓடிடி ஒன்றில் வெளியாக உள்ளது. இதற்காக பெரும்தொகை நயன் – விக்கி தம்பதியருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திருமணத்தை இயக்குனர் கவுதம் மேனன் தான் இயக்குகிறார். மிகவும் ஆடம்பரமாக பிரம்மாண்டமாய் திருமணத்தை நடத்தி உள்ளனர்.

வார்த்தைக்கு வார்த்தை நயன்தாராவை என் தங்கமே… தங்கமே… என்று அழைக்கும் விக்னேஷ் சிவன் ஒருவழியாக தனது தங்கம் நயன்தாராவை கரம் பிடித்துவிட்டார். இவர்களது இல்லற வாழ்வு சிறக்க திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.