இல்லாதப்பட்ட மக்களின் வீடுகளை அகற்றுவதா திமுகவை சாடும்- இயக்குநர் பா.ரஞ்சித்

0
176

பிரபல தமிழ்திரையுலக இயக்குநர் பா.ரஞ்சித், தற்போது திமுக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை எதிர்த்து முதியவர் தீக்குளித்துள்ளார்.

இந்நிலையில், விடியல் ஆட்சியிலும் சென்னை பூர்வகுடிகள் மீதான அடக்குமுறை தொடர்கிறது.

மாற்றுத்திட்டம் என்பது சென்னையை விட்டு வெளியேற்றுவது மட்டும்தானா?

மக்களின் உரிமையை, உணர்வை, கோரிக்கையை எப்போது யோசிக்க, மதிக்கத் தொடங்குவீர்கள் தமிழ்நாடு அரசே? என, இயக்குநர் பா.இரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக அரசின் செயலுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.