டெல்லியில் குற்றங்களை குறைத்த கொரோனா…

0
357

கொரோனா வைரஸ் காரணமாக டில்லியில் 42 சதவீதம் அளவிற்கு குற்றங்கள் குறைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகெங்கும் வேகமாக பரவி வரும் சூழலில் இந்தியாவில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.இந்நிலையில் டெல்லி மற்றும் வட மாநிலங்களில் குற்ற சம்பவங்கள் பெருமளவு குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து தெரிவித்துள்ள டெல்லி காவல்துறை, கடந்த ஆண்டு இதே மார்ச் மாத காலகட்டங்களில் 3,416 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், இந்தாண்டு மார்ச் மாதம் 15ம் தேதி முதல் 31 ஆகிய இடைப்பட்ட நாட்களில் 1,990 வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நாட்டில் அதிக குற்றங்கள் நடக்கும் டெல்லியில் 42 சதவீதம் அளவுக்கு குற்றங்கள் குறந்துள்ளது குறிப்பிடத்தக்கது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here