கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று காரணமாக கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி மத்திய அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளி பணியாளர்கள் அலுவலகம் செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், அவர்கள் வீட்டில் இருந்தே அலுவல் பணிகளை தொடரலாம் என மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
துணை செயலர்கள் அந்தஸ்துக்கு கீழ் உள்ள அரசு ஊழியர்களில் 50 சதவீதம் பேர் மட்டும் பணிக்கு வர அறிவுறுத்தப்படுவதாகவும், சுழற்சி முறையில் இது அமல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய அரசு அலுவலகங்களில், அலுவல் கூட்டங்கள் முடிந்தவரை காணொலி மூலம் நடத்தப்பட வேண்டும் என்றும் பார்வையாளர்களுடனான சந்திப்புகளை மிகவும் தேவையாக இருந்தால் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.